செய்திகள்

கொல்கத்தாவில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா 3 நாள் சுற்றுப்பயணம்

Published On 2017-09-10 21:13 GMT   |   Update On 2017-09-10 21:35 GMT
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி:

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அடுத்து வரவுள்ள 2019 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய அளவில் பா.ஜ.க.வை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கட்சி பலவீனமாக உள்ள இடங்களில் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சுமார் 110 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிப் பணிகளை விரிவுபடுத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று முதல் கொல்கத்தாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பாஜக வெளியிட்ட செய்தியில், இன்று காலை 11 மணிக்கு கட்சி தலைவர்களை சந்திக்கிறார். நாளை கட்சி தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை மறுதினம் அமித்ஷா செய்தியாளர்கள் சந்திக்கிறார் என தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்த 7 நகராட்சி தேர்தலில் பா.ஜ.க. அதிக வாக்குகள் பெற்றுள்ள நிலையில், பா.ஜ.க. தலைவரின் சுற்றுப்பயணம் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News