செய்திகள்

புளூவேல் விளையாட்டை விளையாட தடை - குஜராத் அரசு முடிவு

Published On 2017-09-05 17:59 GMT   |   Update On 2017-09-05 17:59 GMT
குஜராத் மாநிலத்தில் புளூவேல் விளையாட்டை விளையாட தடை செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபனி கூறியுள்ளார்.
காந்திநகர்:

இந்தியாவில் நீலத் திமிங்கலம் எனப்படும் ‘புளூவேல்‘ விளையாட்டை விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. 50 நாட்களை இலக்காக கொண்டே அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உத்தரவு பிறப்பிக்கப்படும். அந்த உத்தரவை நிறைவேற்றும் மாணவர்கள் அதனை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விளையாட்டில், இரவு நேரத்தில் திகில் படங்களை பார்ப்பது, கையை அறுத்துக்கொள்வது, மொட்டை மாடியில் இருந்து குதிப்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த விபரீதமான விளையாட்டுக்கு ஏராளமான மாணவ–மாணவிகள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர்.



இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு ‘புளூவேல்‘ விளையாட்டுக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது. ஆனாலும், இந்த விளையாட்டு மட்டும் ஒழிந்தபாடில்லை.

இந்தநிலையில் குஜராத் மாநிலத்தில் புளூவேல் விளையாட்டை விளையாட தடை செய்ய  அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி விஜய் ரூபனி கூறியதாவது:

நீலத் திமிங்கலம் எனப்படும் ‘புளூவேல்‘ விளையாட்டை தடை செய்யவதற்கான வழிகளை கண்டறிந்து உள்துறைக்கும், பிரதமர் செயலாளருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விளையாட்டால் பொதுமக்கள் தற்கொலை செய்வதை நிறுத்த வேண்டும். தேவைப்பட்டால் இந்த விளையாட்டு விளையாட தடை செய்யப்பட வேண்டும்.  குஜராத்தில் இந்த விளையாட்டு விளையாட தடை செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

சமீபத்தில் குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த அசோக் மலூனா (வயது 30) ‘புளூவேல்‘ விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்டது. அவர் கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News