search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Rupani"

    ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்ட வடிவம் பெற்றுள்ள வருமானத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் என முதல் மந்திரி விஜய் ருபானி அறிவித்துள்ளார். #RamnathKovind #10pcreservation
    அகமதாபாத்:

    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா சமீபத்தில் நிறைவேறியது.

    ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார். இதைதொடர்ந்து, அவரது ஓப்புதலுடன் இதற்கான இந்திய அரசின் அரசிதழ் அறிவிக்கையும் (Gazette Notification) வெளியானது. இதன்மூலம் நாடு முழுவதும் நேற்றிலிருந்து இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.


    இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல் மந்திரி விஜய் ருபானி இன்று அறிவித்துள்ளார். இதன்மூலம் இந்த சட்டத்தை முதன்முதலாக நடைமுறைப்படுத்தும் மாநிலமாக குஜராத் சிறப்பிடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.   #VijayRupani #Gujaratgovernment #10pcreservation
    வல்லபாய் படேல் சிலை கட்டுமான பணியை விமர்சித்த ராகுல் காந்தி ஒரு இத்தாலியர், ராகுல் உடலில் இத்தாலி ரத்தம் ஓடுவதால் அவர் தான் மேட் இன் இத்தாலி என குஜராத் முதல்வர் விமர்சித்துள்ளார். #RahulGandhi #VijayRupani #StatueofUnity
    போபால் :

    இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில்
    குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரை அருகே சிலை அமைக்கப்பட்டு வருகிறது. `ஒருமைப்பாட்டு சிலை' எனப் பெயர் வைக்கப்பட்ட இந்த சிலை உலகிலேயே உயரமானது என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

    இரும்பு மனிதர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இரும்பில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டு இறுதிகட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ. 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுவரும் இந்த சிலையை வல்லபாய் படேல் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

    இந்நிலையில், இந்த சிலை சீனாவுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தின் உதவியுடன் கட்டப்பட்டு வருவதாகவும், இது படேலுக்கு செய்யப்பட்ட அவமரியாதை எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம், சட்னாவில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ‘சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், துரதிஷ்டவசமாக வல்லபாய் படேல் சிலை சீனாவால் தயாரிக்கப்படுவதால் சிலையில் மேட் இன் சீனா என்ற வாசகம் பொறிக்க வேண்டும்.

    சீனாவை சேர்ந்த நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்தவரின் சிலை கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த செயல் விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தேசியவாதியுமான படேலுக்கு செய்யும் அவமரியாதையாகும்.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அவரது  கருத்துக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ’வெட்கமின்றி ராகுல் காந்தி பொய் பேசி வருகிறார். ராகுலின் உடலில் ஓடுவது இத்தாலி ரத்தம், வெளிநாட்டுக்காரரான அவர் ஒரு மேட் இன் இத்தாலி. உலகின் மிகப்பெரிய சிலை கட்டப்பட்டு வருகிறது அதை பார்த்து ராகுல் ஏன் பெருமைப்படவில்லை ?.



    வல்லபாய் படேல் சிலை கட்டுமானத்தை எல் & டி நிறுவனம் செய்து வருகிறது. இதற்கு தேவையான 95 சதவிகித மூலப்பொருட்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். ஆனால், நம்மிடம் இல்லாத 5 சதவிகித வெண்கலப் பொருட்கள் மட்டுமே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது’ என ரூபானி கூறினார். #RahulGandhi #VijayRupani #StatueofUnity
    குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி ஆறுநாள் அரசுமுறை பயணமாக இன்று இஸ்ரேல் நாட்டுக்கு செல்கிறார். #GujaratCM #VijayRupani
    அகமதாபாத்:

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்திருந்தபோது குஜராத் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அப்போது தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானியை அவர் கேட்டு கொண்டார்.

    இதையடுத்து, ஆறுநாள் அரசுமுறை பயணமாக விஜய் ருபானி இன்று இஸ்ரேல் நாட்டுக்கு செல்கிறார். அவருடன் குஜராத் மாநில மந்திரிகள், உயரதிகாரிகள், பிரபல தொழிலதிபர்கள் கொண்ட குழுவினரும் மும்பையில் உள்ள இஸ்ரேல் துணை தூதரும் செல்கின்றனர்.

    நவீன முறையிலான வேளாண்மை தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் இஸ்ரேலில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது? என்பதை இந்த குழுவினர் பார்வையிட உள்ளனர்.

    கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து இஸ்ரேல் நாட்டில் வாழ்ந்துவரும் பெரும்பாலான குஜராத்தியர்கள் அங்கு வைர வியாபாரம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் மந்திரி மற்றும் உடன் செல்பவர்கள் அங்குள்ள இந்தியர்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மற்றும் வேளாண்மைத்துறை மந்திரி உரி ஏரியல் ஆகியோரை சந்திக்கும் விஜய் ருபானி முன்னிலையில் இருநாடுகள் இடையில் சில முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் யூதர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டதை விவரிக்கும் ஜெருசலேம் அருங்காட்சியகத்தை பார்வையிடும் விஜய் ருபானி, இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் கல்லறைகளில் மரியாதை செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #VijayRupanivisitsIsrael #VijayRupani
    ×