என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் தயாரிக்கப்படுவதால் வல்லபாய் படேல் சிலையில் ‘மேட் இன் சீனா’ என்ற வாசகம் பொறிக்கப்படவேண்டும் - ராகுல்
Byமாலை மலர்28 Sept 2018 1:05 AM IST (Updated: 28 Sept 2018 1:05 AM IST)
வல்லபாய் படேல் சிலை கட்டுமான பணியை விமர்சித்த ராகுல் காந்தி ஒரு இத்தாலியர், ராகுல் உடலில் இத்தாலி ரத்தம் ஓடுவதால் அவர் தான் மேட் இன் இத்தாலி என குஜராத் முதல்வர் விமர்சித்துள்ளார். #RahulGandhi #VijayRupani #StatueofUnity
போபால் :
இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில்
குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரை அருகே சிலை அமைக்கப்பட்டு வருகிறது. `ஒருமைப்பாட்டு சிலை' எனப் பெயர் வைக்கப்பட்ட இந்த சிலை உலகிலேயே உயரமானது என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
இரும்பு மனிதர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இரும்பில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டு இறுதிகட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ. 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுவரும் இந்த சிலையை வல்லபாய் படேல் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில், இந்த சிலை சீனாவுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தின் உதவியுடன் கட்டப்பட்டு வருவதாகவும், இது படேலுக்கு செய்யப்பட்ட அவமரியாதை எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், சட்னாவில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ‘சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், துரதிஷ்டவசமாக வல்லபாய் படேல் சிலை சீனாவால் தயாரிக்கப்படுவதால் சிலையில் மேட் இன் சீனா என்ற வாசகம் பொறிக்க வேண்டும்.
சீனாவை சேர்ந்த நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்தவரின் சிலை கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த செயல் விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தேசியவாதியுமான படேலுக்கு செய்யும் அவமரியாதையாகும்.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவரது கருத்துக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ’வெட்கமின்றி ராகுல் காந்தி பொய் பேசி வருகிறார். ராகுலின் உடலில் ஓடுவது இத்தாலி ரத்தம், வெளிநாட்டுக்காரரான அவர் ஒரு மேட் இன் இத்தாலி. உலகின் மிகப்பெரிய சிலை கட்டப்பட்டு வருகிறது அதை பார்த்து ராகுல் ஏன் பெருமைப்படவில்லை ?.
வல்லபாய் படேல் சிலை கட்டுமானத்தை எல் & டி நிறுவனம் செய்து வருகிறது. இதற்கு தேவையான 95 சதவிகித மூலப்பொருட்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். ஆனால், நம்மிடம் இல்லாத 5 சதவிகித வெண்கலப் பொருட்கள் மட்டுமே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது’ என ரூபானி கூறினார். #RahulGandhi #VijayRupani #StatueofUnity

Next Story
×