என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் ரூபானி"

    • விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
    • கோர விமான விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.

    மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

    இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இதில், விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. விபத்தில் மீட்கப்பட்ட விஜய் ரூபானியின் உடல் டி.என்.ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
    • விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.

    மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    AI-171 விமான விபத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க பிரதமர் மோடி அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு வந்தார். விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.

    இந்நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

    • அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்
    • 2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக ரூபானி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

    அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171- ல் பயணித்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர் என கூறப்பட்டது.

    குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பிஸ்னஸ் கிளாஸ்-இல் பயணம் செய்த நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

    2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக ரூபானி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 

    • விஜய் ரூபானியின் Boarding Pass சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    • 2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக பணியாற்றிய ரூபானி.

    அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171- ல் பயணித்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர் என கூறப்படுகிறது.

    அவரின் Boarding Pass சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக பணியாற்றிய ரூபானி, பயணிகள் பட்டியலில் 12வது நபராக அவரது பெயர் உள்ளது.

    வல்லபாய் படேல் சிலை கட்டுமான பணியை விமர்சித்த ராகுல் காந்தி ஒரு இத்தாலியர், ராகுல் உடலில் இத்தாலி ரத்தம் ஓடுவதால் அவர் தான் மேட் இன் இத்தாலி என குஜராத் முதல்வர் விமர்சித்துள்ளார். #RahulGandhi #VijayRupani #StatueofUnity
    போபால் :

    இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில்
    குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரை அருகே சிலை அமைக்கப்பட்டு வருகிறது. `ஒருமைப்பாட்டு சிலை' எனப் பெயர் வைக்கப்பட்ட இந்த சிலை உலகிலேயே உயரமானது என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

    இரும்பு மனிதர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இரும்பில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டு இறுதிகட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ. 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுவரும் இந்த சிலையை வல்லபாய் படேல் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

    இந்நிலையில், இந்த சிலை சீனாவுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தின் உதவியுடன் கட்டப்பட்டு வருவதாகவும், இது படேலுக்கு செய்யப்பட்ட அவமரியாதை எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம், சட்னாவில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ‘சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், துரதிஷ்டவசமாக வல்லபாய் படேல் சிலை சீனாவால் தயாரிக்கப்படுவதால் சிலையில் மேட் இன் சீனா என்ற வாசகம் பொறிக்க வேண்டும்.

    சீனாவை சேர்ந்த நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்தவரின் சிலை கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த செயல் விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தேசியவாதியுமான படேலுக்கு செய்யும் அவமரியாதையாகும்.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அவரது  கருத்துக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ’வெட்கமின்றி ராகுல் காந்தி பொய் பேசி வருகிறார். ராகுலின் உடலில் ஓடுவது இத்தாலி ரத்தம், வெளிநாட்டுக்காரரான அவர் ஒரு மேட் இன் இத்தாலி. உலகின் மிகப்பெரிய சிலை கட்டப்பட்டு வருகிறது அதை பார்த்து ராகுல் ஏன் பெருமைப்படவில்லை ?.



    வல்லபாய் படேல் சிலை கட்டுமானத்தை எல் & டி நிறுவனம் செய்து வருகிறது. இதற்கு தேவையான 95 சதவிகித மூலப்பொருட்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். ஆனால், நம்மிடம் இல்லாத 5 சதவிகித வெண்கலப் பொருட்கள் மட்டுமே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது’ என ரூபானி கூறினார். #RahulGandhi #VijayRupani #StatueofUnity
    ×