என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Planes Crash"

    • மேலே பறந்த சில நிமிடங்களில் அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
    • இதனால் ஓடுபாதையில் விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது.

    கராகஸ்:

    வெனிசுலாவின் டாச்சிரா மாகாணம் பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.

    ரன்வேயை விட்டு மேலே பறந்த சில நிமிடங்களிலேயே அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ரன்வேயில் விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேரும் கருகி பலியாகினர்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
    • கோர விமான விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.

    மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

    இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இதில், விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. விபத்தில் மீட்கப்பட்ட விஜய் ரூபானியின் உடல் டி.என்.ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • விமான விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
    • விடுதியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல்.

    அகமதாபாத் விமான விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானம் பி.ஜே. மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், விடுதி மற்றும் விடுதி அருகில் இருந்தவர்களும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

    விடுதியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமான விபத்தில் சிக்கியவர்கள் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு காரணத்திற்காக பயணம் மேற்கொண்டனர். இதில், உயிரிழந்த ஒவ்வொரு உயிருக்கும் உருக்கமான கதைகளும் இருந்திருக்கிறது.

    அந்த வகையில், பிரிட்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியுடன் குஜராத் வந்த அர்ஜூன் மறுபாய் என்பவர் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.

    தனது மனைவியின் ஆசைப்படி அஸ்தியை நர்மதா ஆற்றில் கரைத்துவிட்டு விமானத்தில் ஏறியவர் விபத்தில் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • காயமடைந்த சுமார் 50 பேர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்டுள்ளனர்.
    • சிவில் மருத்துவமனை அகமதாபாத் இரண்டு ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது.

    விமான விபத்து குறித்து குஜராத் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தனஞ்சய் திவேதி கூறியதவாது:-

    அகமதாபாத் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் சிவில் மருத்துவமனை மாணவர் விடுதி, ஊழியர்கள் குடியிருப்புகள் மற்றும் பிற குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன.

    அந்தப் பகுதியில் வசிப்பவர்களும் காயமடைந்தனர். காயமடைந்த சுமார் 50 பேர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்டுள்ளனர்.

    அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பி.ஜே. மருத்துவத்தில் டி.என்.ஏ சோதனை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே விமானப் பயணிகளின் குடும்பங்கள் மற்றும் நெருங்கியவர்கள், குறிப்பாக அவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள், அந்த இடத்தில் தங்கள் மாதிரிகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள். பயணிகளின் உறவினர்கள் மற்றும் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பிற காயமடைந்தவர்கள் ஏதேனும் விசாரணை செய்ய வேண்டுமானால், சிவில் மருத்துவமனை அகமதாபாத் இரண்டு ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது. அதன்படி எந்த உதவிக்கும் , 6357373831 மற்றும் 6357373841 இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2020-ல் கோழிக்கோடு பகுதியில் பதிவாகியுள்ளது. இதில் 21 பேர் உயிரிழந்தனர்.
    • மங்களூரில் ஓடுபாதையை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்துள்ள நிலையில், இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியாவில் கடந்த காலங்களில் இதுபோன்று பல்வேறு இடங்களில் விமான விபத்துகள் நடைபெற்றுள்ளது.

    இதில், இந்தியாவை உலுக்கிய 10 பெரிய விமான விபத்துகள் குறித்து பார்ப்போம்.

    கடந்த 2020-ல் கோழிக்கோடு பகுதியில் பதிவாகியுள்ளது. இதில் 21 பேர் உயிரிழந்தனர்.

    துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 1344 காலிகட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், விமானம் விழுந்து ஓடுபாதையில் இருந்து சறுக்கி இரண்டாக உடைந்தது.

    மே 22, 2010, மங்களூர் விமான விபத்து: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812 மங்களூரில் ஓடுபாதையை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர்.

    ஜூலை 17, 2000, பாட்னா விமான விபத்து: அலையன்ஸ் ஏர் விமானம் 7412-ல் போயிங் 737 விமானம் பாட்னாவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விமானம் கட்டுப்பாட்டை இழந்ததே காரணம் ஆகும்.

    நவம்பர் 12, 1996, சார்கி தாத்ரி நடுவானில் மோதியது: சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் போயிங் 747 மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் இலியுஷின் இல்-76 ஆகியவை டெல்லி அருகே மோதி விபத்துக்குள்ளானது. இரு விமானங்களிலும் இருந்த 349 பேரும் உயிரிழந்தனர். விமானியின் தவறு மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தவறான தொடர்பு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டது.

    ஏப்ரல் 26, 1993, அவுரங்காபாத் விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 491, போயிங் 737, அவுரங்காபாத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளானது. இதில், ஒரு டிரக் மற்றும் மின் கம்பிகளில் மோதி 55 பேர் உயிரிழந்தனர்.

    ஆகஸ்ட் 16, 1991, இம்பால் விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 257 இம்பால் அருகே விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 69 பேரும் உயிரிழந்தனர்.

    பிப்ரவரி 14, 1990, பெங்களூரு விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 605, ஏர்பஸ் A320, பெங்களூருவை நெருங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில், 92 பேர் உயிரிழந்தனர்.

    அக்டோபர் 19, 1988, அகமதாபாத் விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 113 அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது. இதில், 133 பேர் உயிரிழந்தனர்.

    ஜூன் 21, 1982, பம்பாய் விமான விபத்து: ஏர் இந்தியா விமானம் 403 பம்பாய் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில், 17 பேர் உயிரிழந்தனர்.

    ஜனவரி 1, 1978, பம்பாய் விமான விபத்து: ஏர் இந்தியா போயிங் 747 விமானம் மும்பையில் இருந்து புறப்பட்ட பிறகு அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 213 பேரும் உயிரிழந்தனர்.

    • ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
    • விமான விபத்து அதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்நிலையில், விமான விபத்து அதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்.

    பாதிக்கப்பட்ட அனைவருடனும், விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு விரைந்துள்ளார்.
    • மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மேகனி நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதைத் தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்த 242 பேரின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த நிலையில், 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். பல உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநிலம் முதல்வர் மற்றும் போலீஸ் துறை அமைச்சரிடம் பேசியுள்ளார். அப்போது மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

    இந்நிலையில், சம்பவ இடத்தைப் பார்வையிட மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு விரைந்துள்ளார்.

    இந்நிலையில், விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை தொடர்பு கொண்டு விமான விபத்து குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.

    பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

    விபத்து நடந்த இடத்திற்கு, உற்துறை அமைச்சர், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோரை அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

    • விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மேகனி நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
    • 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மேகனி நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதைத் தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்த 242 பேரின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த நிலையில், 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். பல உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநிலம் முதல்வர் மற்றும் போலீஸ் துறை அமைச்சரிடம் பேசியுள்ளார். அப்போது மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

    இந்நிலையில், சம்பவ இடத்தைப் பார்வையிட மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு விரைந்துள்ளார்.

    அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

    விபத்து தொடர்பாக நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். நான் தனிப்பட்ட முறையில் நிலைமையைக் கண்காணித்து வருகிறேன். மேலும் அனைத்து விமானப் போக்குவரத்து மற்றும் அவசரகால மீட்பு நிறுவனங்களும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

    மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ உதவி மற்றும் நிவாரண உதவி சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    விமானத்தில் இருந்த அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கனடாவின் ஒட்டாவா நகர் அருகே நடுவானில் சிறு விமானங்கள் மோதிக்கொண்டதில், ஒரு விமானத்தின் விமானி உயிரிழந்தார். #PlaneCrash
    ஒட்டாவா:

    கனடாவின் ஒட்டாவா நகர் அருகே கார்ப் என்ற பகுதியில் நேற்று ஒரு விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போதே வான் பகுதியில் வந்த மற்றொரு சிறிய ரக விமானம், திடீரென அந்த விமானத்தின் மீது மோதியது. இதனால் இரண்டு விமானங்களும் நிலை குலைந்து தரையை நேக்கி பாய்ந்தன.

    இதில், சிறிய ரக விமானம் சாலையோரம் உள்ள  புல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் பைலட் உயிரிழந்தார். அந்த விமானத்தில் அவர் மட்டுமே பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.



    மற்றொரு விமானத்தின் பைலட், விமானத்தை சாமர்த்தியமாக திருப்பி ஒட்டாவா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #PlaneCrash
    ×