என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகள்- முழு விவரம்
    X

    இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகள்- முழு விவரம்

    • கடந்த 2020-ல் கோழிக்கோடு பகுதியில் பதிவாகியுள்ளது. இதில் 21 பேர் உயிரிழந்தனர்.
    • மங்களூரில் ஓடுபாதையை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்துள்ள நிலையில், இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியாவில் கடந்த காலங்களில் இதுபோன்று பல்வேறு இடங்களில் விமான விபத்துகள் நடைபெற்றுள்ளது.

    இதில், இந்தியாவை உலுக்கிய 10 பெரிய விமான விபத்துகள் குறித்து பார்ப்போம்.

    கடந்த 2020-ல் கோழிக்கோடு பகுதியில் பதிவாகியுள்ளது. இதில் 21 பேர் உயிரிழந்தனர்.

    துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 1344 காலிகட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், விமானம் விழுந்து ஓடுபாதையில் இருந்து சறுக்கி இரண்டாக உடைந்தது.

    மே 22, 2010, மங்களூர் விமான விபத்து: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812 மங்களூரில் ஓடுபாதையை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர்.

    ஜூலை 17, 2000, பாட்னா விமான விபத்து: அலையன்ஸ் ஏர் விமானம் 7412-ல் போயிங் 737 விமானம் பாட்னாவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விமானம் கட்டுப்பாட்டை இழந்ததே காரணம் ஆகும்.

    நவம்பர் 12, 1996, சார்கி தாத்ரி நடுவானில் மோதியது: சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் போயிங் 747 மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் இலியுஷின் இல்-76 ஆகியவை டெல்லி அருகே மோதி விபத்துக்குள்ளானது. இரு விமானங்களிலும் இருந்த 349 பேரும் உயிரிழந்தனர். விமானியின் தவறு மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தவறான தொடர்பு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டது.

    ஏப்ரல் 26, 1993, அவுரங்காபாத் விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 491, போயிங் 737, அவுரங்காபாத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளானது. இதில், ஒரு டிரக் மற்றும் மின் கம்பிகளில் மோதி 55 பேர் உயிரிழந்தனர்.

    ஆகஸ்ட் 16, 1991, இம்பால் விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 257 இம்பால் அருகே விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 69 பேரும் உயிரிழந்தனர்.

    பிப்ரவரி 14, 1990, பெங்களூரு விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 605, ஏர்பஸ் A320, பெங்களூருவை நெருங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில், 92 பேர் உயிரிழந்தனர்.

    அக்டோபர் 19, 1988, அகமதாபாத் விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 113 அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது. இதில், 133 பேர் உயிரிழந்தனர்.

    ஜூன் 21, 1982, பம்பாய் விமான விபத்து: ஏர் இந்தியா விமானம் 403 பம்பாய் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில், 17 பேர் உயிரிழந்தனர்.

    ஜனவரி 1, 1978, பம்பாய் விமான விபத்து: ஏர் இந்தியா போயிங் 747 விமானம் மும்பையில் இருந்து புறப்பட்ட பிறகு அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 213 பேரும் உயிரிழந்தனர்.

    Next Story
    ×