என் மலர்tooltip icon

    இந்தியா

    விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது
    X

    விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது

    • விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
    • கோர விமான விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.

    மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

    இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இதில், விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. விபத்தில் மீட்கப்பட்ட விஜய் ரூபானியின் உடல் டி.என்.ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×