செய்திகள்

டெல்லி, ஆந்திரா, கோவாவில் காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 23-ல் இடைத்தேர்தல்

Published On 2017-07-27 12:43 GMT   |   Update On 2017-07-27 12:43 GMT
ஆந்திரப்பிரதேசம், கோவா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

கோவாவில் முதல் மந்திரியாக உள்ள மனோகர் பாரிக்கர் போட்டியிடும் பனாஜி தொகுதி மற்றும் வால்போய், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நந்தியால் மற்றும் டெல்லியில் உள்ள பவானா சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன.

இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம், கோவா மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  



இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ‘கோவா, டெல்லி, ஆந்திரப்பிரதேசத்தில் காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் ஜூலை 29ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா மாநிலத்தில் முதலமைச்சர் பாரிக்கர், 6 மாதத்தில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால், பனாஜி தொகுதி எம்.எல்.ஏ. சித்தார்த் குன்கலிகேங்கர் ராஜினாமா செய்தார். டெல்லியில் உள்ள பவானா தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. வேதப் பிரகாஷ், தனது பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டார். இதேபோல், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நந்தியால் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. சமீபத்தில் காலமானதை தொடர்ந்து அந்த தொகுதியும் காலியானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News