செய்திகள்

கொலை-ஆயுத வழக்கில் நிதிஷ் குமார் குற்றவாளி: லாலு பிரசாத் யாதவ் பாய்ச்சல்

Published On 2017-07-26 16:16 GMT   |   Update On 2017-07-26 16:17 GMT
பீகாரில் நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததால் ஆளும் மெகா கூட்டணிக்கு சிக்கல் உருவாகி உள்ள நிலையில், அவரே கொலை வழக்கில் குற்றவாளிதான் என லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.
பாட்னா:

பீகாரில் முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால் ஆளும் மெகா கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. இந்த உரசல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இன்று முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேஜஸ்வி யாதவின் தந்தையும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில் நிதிஷ் குமார் மீது கடுமையான தாக்குதலை முன்வைத்து உள்ளார்.

லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், ‘நிதிஷ் குமார் எந்த ஒரு ராஜினாமாவையும் கோரவில்லை. வழக்கறிஞர் ஆலோசனையின்படி தேஜஸ்வி மீது சுமத்தப்பட்டு உள்ள ஊழல் புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசமாட்டேன். பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என நிதிஷ் குமார் வாக்குறுதி அளித்து உள்ளார்.

நிதிஷ் குமாருக்கு தெரியும் அவரே கொலை வழக்கு குற்றவாளி என்று. கொலை மற்றும் ஆயுத வழக்கில் முக்கிய குற்றவாளி முதல்-மந்திரிதான் நிதிஷ் குமார். நிதிஷ் குமாருக்கும் நான் கோரிக்கை விடுக்கின்றேன். ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாக அமர்ந்து பேசவேண்டும், புதிய தலைவரை தேர்வு செய்து ஆட்சி அமைக்க வேண்டும். அவருக்கு இதில் நாட்டமில்லை என்றால் அவர்கள் ஏற்கனவே பாரதீய ஜனதாவுடன் இணைய திட்டமிட்டுவிட்டார் என்பது நிரூபணமாகிவிடும்’ என்றார்.
Tags:    

Similar News