செய்திகள்

பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.க்கு பொதுமக்கள் அமோக ஆதரவு: பிரதமர் மோடி

Published On 2017-07-25 08:22 GMT   |   Update On 2017-07-25 08:22 GMT
பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரிக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருப்பதாக பா.ஜ.க. எம்.பி.க்கள் சந்திப்பின்போது பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி:

உயர் மதிப்பிலான பணத்தை நீக்கம் செய்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி அறிவித்தார்.

இதே போல நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பான ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரிக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் பாரதிய ஜனதா எம்.பி.க்களை அவர் மாநில வாரியாக சந்தித்து வருகிறார். இந்த வகையில் ராஜஸ்தான் மாநில எம்.பி.க்களை சந்தித்தபோது அவர் இதை தெரிவித்தார். எம்.பி.க்கள் மத்தியில் மோடி இது தொடர்பாக பேசியதாவது:-

தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு கடை பிடிக்கப்படும் மென்மையான பொருளாதார கொள்கைகளால் நாட்டுக்கு நல்லது நடக்காது. நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கு இது தெரியும்.

ஆனால் நமது அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. அமல் போன்ற வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் மக்களின் நம்பிக்கையையும், அமோக ஆதரவையும் பெற்றுள்ளோம்.

ஆட்சி நிர்வாகத்தில் நேர்மையான பாதையில் நமது அரசு பயணித்து வருகிறது. இந்த நேர்மையை தான் மக்களும் விரும்புகிறார்கள்.

இவ்வாறு மோடி பேசினார்.
Tags:    

Similar News