செய்திகள்

பாராளுமன்றம் என் கோவில், மக்கள் சேவையே என் விருப்பம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு உரை

Published On 2017-07-24 16:00 GMT   |   Update On 2017-07-24 16:00 GMT
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், பாராளுமன்றம் தன் கோவில் என்றும் மக்கள் சேவையே தன் விருப்பம் என்றும் தெரிவித்தார்.
புதுடெல்லி:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி அவர் இன்று நாட்டு மக்களுக்குஉரையாற்றினார். அவர் பேசியதாவது:-

எனது பதவிக்காலத்தில் ஒவ்வொரு நாளும் நாட்டுக்காகவே கடமையாற்றியுள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றுக்கொண்டேன்.

நாடாளுமன்றம் எனது கோவில். மக்களுக்கு சேவை செய்வதுதான் எனது விருப்பம். கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றின் பெருக்கம்தான் இந்தியாவின் சிறப்பு. சகிப்புத்தன்மையில் இருந்து நமது பலத்தை பெறுகிறோம். இது நூற்றாண்டுகளாக நமது கூட்டு உணர்வின் ஒரு பகுதியாகும்.

கல்வியின் உருமாற்ற சக்தியின் மூலம் சமூகத்தை மறுசீரமைப்பது சாத்தியமாகும். எனது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் நாங்கள் ஒரு மனிதாபிமான மற்றும் மகிழ்ச்சியான நகரத்தை உருவாக்க முயற்சித்தோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News