செய்திகள்

பா.ஜ.க.வை வீழ்த்த 18 எதிர்க்கட்சிகளுடன் நாடு தழுவிய இயக்கம்: மம்தா அதிரடி அறிவிப்பு

Published On 2017-07-21 10:28 GMT   |   Update On 2017-07-21 10:28 GMT
மத்தியில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக 18 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்தப்போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா:

மத்தியில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க. அரசு, மாநில அரசுகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுத்து வருவதாகவும், பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக 18 எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்தப்போவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மம்தா கூறியதாவது:-

மோடி அரசு பொறுப்பேற்றதில் இருந்து வெளிநாடுகளுடனான இந்தியாவின் உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. மத்திய அரசு, மாநிலத்தில் ஆளும் அரசுகளை சுதந்திரமாக செயல்பட அனுமதி மறுக்கின்றது.

மத்தியில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக 18 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாடு தழுவிய இயக்கம் நடத்த உள்ளோம்.

வருகிற ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் பா.ஜ.க.விற்கு எதிரான திட்டங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News