செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: மீராகுமார், கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் இன்று சந்திப்பு

Published On 2017-07-16 03:13 GMT   |   Update On 2017-07-16 03:13 GMT
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தி மீராகுமார் மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் எதிர்க்கட்சி எம்.பி.க்களை இன்று சந்திக்கின்றனர்.
புதுடெல்லி:

ஜனாதிபதி பதவிக்கு ஜூலை 17-ஆம் தேதி (நாளை) தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல், பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி, திமுக, தேசிய காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட 17 கட்சிகள் சார்பில் காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி துணை ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கோபால கிருஷ்ண காந்திக்கு தனது ஆதரவை அளித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தனக்கு ஆதரவு அளிக்கும்படி ஜனாதிபதி வேட்பாளரான மீராகுமார் எதிர்க்கட்சி எம்.பி.க்களை இன்று சந்திக்க உள்ளார். அப்போது அவருடன் துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தியும் எம்.பி.க்களிடம் ஆதரவு கேட்கவுள்ளார்.

ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகள் தங்களுடைய ஆதரவு யாருக்கு? என்பதை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News