search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை ஜனாதிபதி"

    • பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் நிகழ்வுகள் வழக்கம்போல பழைய கட்டிடத்திலேயே நடைபெற உள்ளன.
    • புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லும்போது, ​​பாராளுமன்ற ஊழியர்கள் புதிய சீருடை அணிந்து செல்வார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) பழைய கட்டிடத்தில் தொடங்குகிறது.

    இதையொட்டி இன்று புதிய பாராளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    கடந்த மே மாதம் 28-ந் தேதி திறக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் தேசிய கொடி ஏற்றப்படவில்லை என்பதால் இன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

    லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, முரளீதரன், பியூஷ் கோயல், அர்ஜூன் ராம்மேக்வால், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரமோத் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

    பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் நிகழ்வுகள் வழக்கம்போல பழைய கட்டிடத்திலேயே நடைபெற உள்ளன. அடுத்த நாள் முதல் 22-ந்தேதி வரை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, பாராளுமன்ற செய்தி இதழில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் வரை இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர, வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன. மேலும், பாராளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவும் இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    சிறப்புக் கூட்டத்தொடரில் பா.ஜ.க. உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு அக்கட்சி கொறடா உத்தரவிட்டு உள்ளார். இதனிடையே சிறப்புக் கூட்டத்தொடரை முன்னிட்டு, மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    இதில், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கேட்கும் எனத் தெரிகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதனால், அதுபற்றி இந்த சிறப்பு கூட்டத்தொடரில் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    அதேபோல் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது, ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தது பற்றியும் ஆலோ சிக்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லும்போது, பாராளுமன்ற ஊழியர்கள் புதிய சீருடை அணிந்து செல்வார்கள். இவற்றை நிப்ட் எனப்படும் பாட்னா தேசிய பேஷன் தொழில்நுட்ப மையம் தயாரித்துள்ளது.

    பாராளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் சீருடை இனி அடர் இளஞ்சிவப்பு நிறத்திலான அல்லது மஜெண்டா நிறத்திலான நேரு ஜாக்கெட் மாடலில் இருக்கும். இவற்றில் தாமரைப் பூக்கள் அச்சாகி இருக்கும். பேண்ட் காக்கி நிறத்திலேயே இருக்கும்.

    அதேபோல் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் காவலர்களின் உடைகளும் மாற்றப்படுகின்றன. அவர்கள் மணிப்பூரி தலைப்பாகை அணிந்திருப்பார்கள்.

    பாராளுமன்ற வளாகப் பாதுகாவலர்களின் சீருடையும் மாற்றப்படுகிறது. சபாரி உடைக்குப் பதிலாக அவர்களுக்கு ராணுவத்தினர் அணியும் உருமறைப்பு உடைகள் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாராளுமன்ற புதிய கட்டிடத்தின் வடிவமைப்பு, நிறம் ஆகியனவற்றையும் இந்த சீருடைகள் பிரதிபலிக்கும். அனைத்து சீருடைகளிலும் செல்போனை வைத்துக் கொள்வதற்காகவே பிரத்யேக பாக்கெட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
    • துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வருகையையொட்டி திருவனந்தபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து நாளை (21-ந் தேதி) திருவனந்தபுரம் வருகிறார். அங்கு பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

    மறுநாள் அவர் திருவனந்தபுரம் சட்டசபை கட்டிட வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்போது இது தொடர்பான நினைவு சின்னத்தையும் திறந்து வைக்கிறார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வருகையையொட்டி திருவனந்தபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • திட்டமிட்டபடி அதே நாளில் பட்டமளிப்பு விழாவினை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதன்முதலாக வருவதால் அவரது வருகைக்கான ஏற்பாடுகளை புதுவை அரசு தீவிரம் காட்டியது. இதுதொடர்பாக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தினர்.

    இந்தநிலையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக பிரச்சினைகள் காரணமாக அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே திட்டமிட்டபடி அதே நாளில் பட்டமளிப்பு விழாவினை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 28-ந்தே தி நடக்கிறது.
    • விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. டாக்டர் அம்பேத்கர் நிர்வாக கட்டிடத்தில் உள்ள ஜவகர்லால் நேரு அரங்கில் இந்த பட்டமளிப்பு விழா நடக்கிறது.

    விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 புதிய கட்டிடங்களை திறந்துவைத்து பட்டங்களை வழங்குகிறார்.

    விழாவில் 21 ஆயிரத்து 208 புதுவை பல்கலைக்கழக மற்றும் இணைப்பு கல்லூரி மாணவர்கள், 10 ஆயிரத்து 649 தொலை தூர கல்வி மாணவர்கள் என 31 ஆயிரத்து 857 மாணவர்கள் பட்டங்களை பெறுகிறார்கள்.

    இதில் 242 ஆராய்ச்சி மாணவர்களும் பல்வேறு பட்டப்பிரிவுகளில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்கள் பெற உள்ள 187 மாணவர்களும் அடங்குவார்கள்.

    பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது. துணை ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதல்முறையாக ஜெகதீப்தன்கர் புதுவை வருவதையொட்டி அரசு சார்பிலான நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    • துணை ஜனாதிபதி பதவி, நாட்டின் 2-வது உயரிய பதவி ஆகும்.
    • துணை ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

    புதுடெல்லி :

    நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் நேற்று பதவி ஏற்றார். அவருக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன என்பது பற்றிய ஒரு பார்வை இது:-

    * துணை ஜனாதிபதி பதவி, நாட்டின் 2-வது உயரிய பதவி ஆகும். மரணம், ராஜினாமா, நீக்கம் போன்ற சூழலில் ஜனாதிபதி பதவி காலியாகிறபோது, புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறவரையில், துணை ஜனாதிபதிதான் தற்காலிக ஜனாதிபதி ஆக பொறுப்பேற்பார். இந்த கால கட்டத்தில் ஜனாதிபதி பதவிக்கான அனைத்து அதிகாரங்கள், சலுகைகள், சம்பளம், அலவன்சுகள் உண்டு. ஆனால் அவர் மாநிலங்களவை தலைவராக பணியாற்றவோ அதற்கான சம்பளம், அலவன்சுகளையோ பெற முடியாது.

    * துணை ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுக்காலம்தான் என்றாலும் கூட, பதவிக்காலம் முடிந்தாலும் புதிய துணை ஜனாதிபதி பதவி ஏற்கிறவரை, இவர் பதவியில் தொடரலாம்.

    * துணை ஜனாதிபதிதான் மாநிலங்களவை தலைவர் என்ற வகையில், அந்த சபையை நடத்துவது தொடர்பான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு உண்டு.

    • பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.
    • பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் கடந்த 6-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதையடுத்து ஜெகதீப் தன்கர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வானார்.

    கடந்த 7-ந் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் கூட்டாக புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழில் கையெழுத்திட்டனர்.

    இந்த நிலையில் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் நேற்று பாராளுமன்ற மேல்சபை அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள மேல்சபை அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். தான் பதவி வகித்தபோது கடந்த 5 ஆண்டு காலத்தில் தன் மீது அதிகாரிகள் காட்டிய அன்பையும், அக்கறையையும் நினைவு கூர்ந்து அவர்களை பாராட்டினார்.

    வெங்கையா நாயுடுவிடம் 5 ஆண்டு காலம் பணியாற்றிய அதிகாரிகள் அவருடைய பணிக்காலத்தில் நெருங்கி பழகியதை நினைவு கூர்ந்தனர். இதையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் தனது நினைவாக சீதா அசோக மரக்கன்றை வெங்கையா நாயுடு நட்டார்.

    பாராளுமன்ற கட்டிடத்தின் முற்றம் அமைந்துள்ள பகுதியிலும் அசோக மரக்கன்றை அவர் நட்டார்.

    இந்த நிலையில் இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் இன்று பதவி ஏற்றார்.

    டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 11.45 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வாழ்க்கை குறிப்பு

    1951-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி ராஜஸ்தானில் ஜூன்ஜூனு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் ஜெகதீப் தன்கர் பிறந்தார். சித்தோர்கர் பகுதியில் உள்ள சைனிக் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பிறகு இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்த பிறகு ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படித்தார்.

    முதல் தலைமுறை தொழில் நிபுணராக இருந்த அவர் மாநிலத்தின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

    ராஜஸ்தான் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஆகிய இரண்டிலும் பயிற்சி பெற்றுள்ளார். 1988-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனதாதளம் கட்சி சார்பில் ஜூன் ஜூனு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அப்போது பொது வாழ்வில் நுழைந்த அவர் 1990-ம் ஆண்டு பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணை மந்திரியாக பணியாற்றினார்.

    ஜாட் சமூகத்தை சேர்ந்த ஜெகதீப் தன்கர் அதன் பிறகு மாநில அரசியலில் கவனம் செலுத்தினார். 1993-ம் ஆண்டு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷன்கர் தொகுதியில் இருந்து ராஜஸ்தான் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார்.

    துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் கடந்த ஜூலை 17-ந் தேதி மேற்கு வங்காள கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இன்று துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் பாராளுமன்ற மேல்சபை தலைவராகவும் இருப்பார். பாராளுமன்ற மேல்சபையை தலைமை தாங்கி நடத்துவார்.

    • இளைஞர்களுடன் வெங்கையா நாயுடுவுக்கு நல்ல புரிதல் உள்ளது.
    • துணை ஜனாதிபதியாக இளைஞர் நலனுக்காக அதிக நேரம் ஒதுக்கியுள்ளார்.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதியும் பாராளுமன்ற மேல்சபை தலைவருமான வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து இன்று பாராளுமன்ற மேல்சபையில் வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பு விழா நடந்தது. இதில் பிரதமர் மோடி, எம்.பி.க்கள், முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு சிறப்பாக செயல்பட்டார். அவர் கடும் உழைப்பு, விடா முயற்சி மூலம் அனைத்து பொறுப்புகளையும் சிறப்பாக கையாண்டார். பா.ஜனதா தலைவராக, எம்.பி.யாக., மத்திய அமைச்சராக, துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு செயல்பட்டுள்ளார்.

    எந்த தருணத்திலும் சூழலுக்கு ஏற்ப செயல்படுவதில் திறன் படைத்தவர். இளைஞர்களுடன் வெங்கையா நாயுடுவுக்கு நல்ல புரிதல் உள்ளது.

    அவர் துணை ஜனாதிபதியாக இளைஞர் நலனுக்காக அதிக நேரம் ஒதுக்கியுள்ளார். அவரது பதவி காலத்தில் மேல்சபையின் செயல்பாடு 70 சதவீதம் அதிகரித்தது. எம்.பி.க்களின் வருகை அதிகரித்துள்ளது. தாய்மொழி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அவரை பாராட்டுகிறேன். மொழிகள் மீதான அவரது ஈடுபாடு அபாரமாக உள்ளது.

    இது அவர் சபைக்கு தலைமை தாங்கிய விதத்தில் பிரதிபலித்தது. வெங்கையா நாயுடு சொல்வதில் ஆழமும், அர்த்தமும் இருக்கும்.

    சுதந்திர இந்தியாவில் பிறந்த ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் பிரதமரின் கீழ் இந்த ஆகஸ்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    சமீபத்தில் நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீஷ் தன்கார் வெற்றி பெற்றார். அவர் வருகிற 11-ந் தேதி துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

    • வெங்கைய நாயுடுவை அழைப்பதற்காக தன்கர் இன்று மாலை ராஷ்டிரபதி நிவாஸ் செல்கிறார்.
    • நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் அவர் 528 வாக்குகளுடன் வெற்றிப் பெற்றார்.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி, ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜெகதீப் தன்கருக்கு, பதவியை நிறைவு செய்ய உள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜக்தீப் தங்கர், பதவி விலகும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை இன்று மாலை சந்திக்கிறார்.

    வெங்கைய நாயுடுவை அழைப்பதற்காக தன்கர் இன்று மாலை ராஷ்டிரபதி நிவாஸ் செல்கிறார். நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக தன்கர் பதவியேற்கிறார்.

    • பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
    • ஜெகதீப் தன்கரின் நீண்டகால பொது வாழ்வின் அனுபவத்தால் நாடு பயனடையும் என்று ஜனாதிபதி ட்வீட்

    புதுடெல்லி:

    நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற தேர்தலில் அவர் 528 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா, 182 வாக்குகளே பெற்றார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி, ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

    துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜெகதீப் தன்கருக்கு, பதவியை நிறைவு செய்ய உள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    'ஜெகதீப் தன்கரின் நீண்டகால பொது வாழ்வின் அனுபவத்தால் நாடு பயனடையும் என்றும் அவரது ஆக்கப்பூர்வமான மற்றும் வெற்றிகரமான பதவிக்காலத்திற்கு வாழ்த்துக்கள்' என ஜனாதிபதி திரவுபதி முர்மு ட்வீட் செய்துள்ளார்.

    • கல்லூரி படிப்பில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ.1000 திட்டம் அறிவிக்கப்பட்டது சிறப்பான ஒன்று.
    • இந்தியாவில் வெளிநாடுகளில் கிடைப்பது போன்ற நல்ல கல்வியை தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

    வேலூர்:

    வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் சார்பில் கேளம்பாக்கம் அருகே காயார் கிராமத்தில் வேலூர் இன்டர்நேஷனல் பள்ளி (வி.ஐ.எஸ்.)தொடங்கப்பட்டுள்ளது.

    இப்பள்ளியின் திறப்பு விழா நடந்தது. வி.ஐ.டி. கல்விக்குழும தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். வி.ஐ.டி. கல்விக்குழும துணைத்தலைவரும், வேலூர் இன்டர்நேஷனல் பள்ளியின் தலைவருமான ஜி.வி.செல்வம் வரவேற்றார்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    வேலூர் சர்வதேச பள்ளியில், குரு சிஷ்யா பரம்பரையின் ஆக்கப்பூர்வ அம்சங்களை தற்கால கற்கபித்தல் முறையோடு ஒருங்கிணைக்க, 'வீட்டு பெற்றோர்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சிப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

    பள்ளிக் கல்வியில் தாய் மொழியை பயன்படுத்துவதற்கும் நாம் உரிய கவனம் செலுத்த வேண்டும். எங்கெங்கு முடியுமோ, குறைந்தபட்சம் தொடக்க நிலை வரையிலாவது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும். ஒருவர் தம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை மொழிகளை கற்றாலும், தாய்மொழியில் வலுவான அடித்தளமிடுவது அவசியம். பல மொழிகளை பயில்வது குழந்தைகளிடையே மேம்பட்ட அறிவாற்றல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் தமது தாய்மொழியுடன், பிற மொழிகளிலும் புலமை பெற்றிருப்பது, கலாச்சார பிணைப்புகளை உருவாக்க உதவுவதோடு, புதிய உலக அனுபவங்களை அறிந்து கொள்ளவும் உதவும்.

    இவ்வாறு பேசினார்.

    அதைதொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு பள்ளியின் தலைவர் ஜி.வி.செல்வம் நினைவு பரிவு வழங்கி கவுரவித்தார்.

    விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், மு.க.ஸ்டாலினின் வாழ்த்து செய்தியை வாசித்தார். அதில், கூறியிருப்பதாவது:-

    வி.ஐ.எஸ். பள்ளியானது உறைவிடப் பள்ளி யாக திட்டமிடப்பட்டுள்ளது. வீடும், பள்ளியுமான இரட்டை நிலைகளையும் கொண்டதாக உள்ளது. வீடு என்பது அன்பையும் பண்பாட்டையும் உள்ளடக்கியது. பள்ளி என்பது அறிவையும் ஆற்றலையும் உள்ளடக்கியது. அத்தகைய அன்பையும், பண்பாட்டையும், அறிவையும், ஆற்றலையும் கற்றுத்தருவதாக இப்பள்ளிஅமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

    ஜி.விசுவநாதன் கல்வி நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்தினாலும் தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகிய நமது விழுமியங்களில் மாறா பற்றுகொண்டு அதற்கான தமிழியக்கத்தையும், தொடர்ந்து நடத்தி வருபவர் என்பதை இந்த நாடு அறியும். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், தாய்மொழிப்பற்று, தமிழ்ப்பண்பாடு, அறிவுக்கூர்மை, தொண்டுள்ளம் ஆகியவையும் கொண்டவர்களாக தமிழக மாணவர் சமுதாயம் வளர தேவையான விழுமியங்களையும் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

    வி.ஐ.டி. கல்விக் குழுமத் தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் பேசுகையில், "கல்லூரி படிப்பில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ.1000 திட்டம் அறிவிக்கப்பட்டது சிறப்பான ஒன்று.

    இந்த திட்டத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் வெளிநாடுகளில் கிடைப்பது போன்ற நல்ல கல்வியை தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும். அரசே எல்லாவற்றையும் செய்து விட முடியாது. தனியார் பங்களிப்பு என்பது கல்வியில் மிக அவசியம்" என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வி.ஐ.டி. துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், அறங்காவலர் அனுஷ செல்வம் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தேமுதிக துணை செயலாளர் எல். கே.சுதீஷ், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி பதி டி.என்.வள்ளிநாயகம், வேல்ஸ் கல்விக்குழும தலைவர் ஐசரிவேலன், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் எஸ்.ஆர். எல்.இதயவர்மன், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வைகைச்செல்வன், சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து காண்டனர். பள்ளி இயக்குனர் சஞ்சீவி நன்றி கூறினார்.

    சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் வி.ஐ.எஸ். எனப்படும் வேலூர் இன்டர் நேஷனல் உறைவிட பள்ளியை இயற்கை சூழ்ந்த எழில்மிகு பகுதியில் மிக பிரமாண்டமாக அமைத்துள்ளது.

    இங்கு வெளிநாட்டு பள்ளிகளுக்கு இணையாக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கல்வியாண்டில் (2022-2023) 5 முதல் 8-ம் வகுப்பு வரை ஐ.சி.எஸ்.இ. மற்றும் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தின் கீழ் இங்கு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    அரசு முறை பயணமாக ரோமானியா சென்றடைந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை அந்நாட்டு துணை பிரதமர் அனா பிர்ச்சல் இந்திய பாரம்பரியப்படி சேலை அணிந்து வரவேற்றார். #VenkaiahNaidu #VicePrimeMinisterofRomania #Ana Birchall
    பசாரெஸ்ட் :

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    தனது பயணத்தின் முதல்நாடாக செர்பியா சென்ற அவருக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செர்பியா மற்றும் இந்திய உயர்அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது.

    பின்னர் வெங்கையா நாயுடு மற்றும் செர்பியா அதிபர் அலக்சாண்டர் வூசிக் இடையே தனியாக சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, தனது பயணத்திட்ட நாடுகளில் இரண்டாவதாக மால்டாவுக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அந்நாட்டு அதிபர் மரியே லூயிசே கொலீரோ ப்ரெகாவை சந்தித்தார். அப்போது இருநாட்டு உறவுகள் மற்றும் பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், தனது பயணத்தின் மூன்றாவது மற்றும் கடைசி நாடான ரோமானியாவிற்கு சென்றடைந்தார். தலைநகர் பசாரெஸ்ட் விமான நிலையத்தில் ரோமானியா துணை பிரதமர் அனா பிர்ச்சல், இந்திய பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து வெங்கையா நாயுடுவை வரவேற்றார். #VenkaiahNaidu  #VicePrimeMinisterofRomania #Ana Birchall
    தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செர்பியா அதிபரை சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். #VenkaiahNaidu
    பெல்கிரேட் :

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    தனது பயணத்தின் முதல்நாடாக செர்பியா சென்றடைந்த அவருக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செர்பியா மற்றும் இந்திய உயர்அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில், உணவு உற்பத்தி, விவசாயம், மருந்துகள், பதுகாப்புத்துறை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். பின்னர், வெங்கையா நாயுடு மற்றும் செர்பியா அதிபர் அலக்சாண்டர் வூசிக் இடையே தனியாக சந்திப்பு நடைபெற்றது.

    இந்த சந்திப்பின்போது இரு நாடுகளின் உறவுகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இரண்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ராவேஷ் குமார் டுவிட்டரில் தெரிவித்தார். #VenkaiahNaidu
    ×