செய்திகள்

ஜி.எஸ்.டி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு வெங்கைய்யா நாயுடு வலியுறுத்தல்

Published On 2017-06-29 13:17 GMT   |   Update On 2017-06-29 13:17 GMT
ஜி.எஸ்.டி வரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவேண்டாம் என மத்திய மத்திரி வெங்கைய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நாளை இரவு ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தும் சிறப்பு கூட்டம் நடக்கவுள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப் போவதாக பகுஜன் சமாஜ், காங்கிரஸ், இடதுசாரிகள், திரினாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

இதுதொடர்பாக, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கைய்யா நாயுடு கூறுகையில், ’’ஜி.எஸ்.டி வரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவேண்டாம். இந்த வரி விதிப்பால் நாட்டின் பொருளாதாரம் உயரும். ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் எதிர்ப்புகளால் பணவீக்கம் மற்றும் ஜி.டி.பியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
 

ஜி.எஸ்.டி குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம். முதலில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டாலும், நீண்ட காலத்துக்கு பயன்தரக் கூடியது என்பதால் வரி செலுத்துபவர்கள் கவலைப்பட தேவையில்லை’’ என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News