செய்திகள்

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த நவீன கட்டுப்பாட்டு அறை: நிதித்துறை அமைச்சகம் ஏற்பாடு

Published On 2017-06-28 07:23 GMT   |   Update On 2017-06-28 07:23 GMT
வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட உள்ளது. அதற்காக மத்திய நிதித்துறை அமைச்சகம் சார்பில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது.

புதுடெல்லி:

வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட உள்ளது. அதற்காக மத்திய நிதித்துறை அமைச்சகம் சார்பில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது.

இதில் டெலிபோன் இணைப்புகள், கம்ப்யூட்டர் இணைப்புகள் அமைக்கப்பட உள்ளன. அவற்றை இளம் தொழில் நுட்ப வல்லுனர்கள் இயக்குவார்கள். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் எழுப்பும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளித்து அவர்களின் சந்தேகங்களை இவர்கள் தீர்த்து வைப்பார்கள்.

காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை இயங்கும். ஒற்றைசாளர முறையில் ஜி.எஸ்.டி. வரி சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கப்படும். இந்த தகவலை கலால் மற்றும் சுங்க இலாகா மத்திய குழு தலைமை அதிகாரி வனஜா என் சர்னா தெரிவித்தார்.

Tags:    

Similar News