செய்திகள்

மருத்துவ கல்விக்கான ‘நீட்’ தேர்வில் மாற்றுப் பாலினத்தோர் 5 பேர் வெற்றி

Published On 2017-06-23 13:40 GMT   |   Update On 2017-06-23 13:41 GMT
மருத்துவ கல்விக்கான இந்த ஆண்டு ’நீட்’ நுழைவு தேர்வில் 5 மாற்றுப் பாலினத்தவர் வெற்றி பெற்றுள்ளனர்.
புதுடெல்லி:

மத்திய அரசின் உத்தரவுப்படி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவு மற்றும் தகுதி தேர்வான ’நீட்’ தேர்வு மே 7-ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வை 11 லட்சத்து 38 ஆயிரத்து 890 மாணவ, மாணவியர் எழுதியிருந்தனர்.

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 6 லட்சத்து 11 ஆயிரத்து 539 பேர் தேர்வாகி உள்ளனர். இதில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 313 மாணவிகளும், 2 லட்சத்து 66 ஆயிரத்து 221 மாணவர்களும் தேர்வாகினர். இந்த நுழைவு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நுழைவு தேர்வில் மொத்தம் 8 மாற்றுப் பாலினத்தவர்கள் தேர்வு எழுதினர். அதில் 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என சி.பி.எஸ்.இ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News