இந்தியா

கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றிபெறும்- வாக்களித்த பிறகு கார்கே பேட்டி

Published On 2024-05-07 07:18 GMT   |   Update On 2024-05-07 07:18 GMT
  • கடந்த 50 ஆண்டுகளாக நான் வாக்களித்து வருகிறேன்.
  • என்னுடன் நின்ற ஏழை மக்களுக்கு நன்றி உள்ளவனாக நான் அவர்களுடன் இருக்கிறேன்.

பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 26-ந்தேதி 14 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. எஞ்சியுள்ள 14 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது மனைவி ராதாபாய் கார்கேவுடன் கலாபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

பின்னர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 50 ஆண்டுகளாக நான் வாக்களித்து வருகிறேன். கர்நாடகாவில் பழமைவாய்ந்த கட்சியான நாங்கள் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெறுவோம்.

பெங்களூரு தொகுதி எங்களுக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் எங்களுக்கு கூடுதல் ஆதரவு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மந்திரியான போதும், எதிர்க்கட்சித் தலைவராகவும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனபோதும் பசவநகரை நான் என்றும் மறந்ததில்லை.

இங்குள்ள மக்கள் எனக்கு அன்பையும் பாசத்தையும் கொடுத்துள்ளனர். அவர்கள் உண்மையில் எனது தலைமையை வளர்த்துள்ளனர். என்னுடன் நின்ற ஏழை மக்களுக்கு நன்றி உள்ளவனாக நான் அவர்களுடன் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டா மணி குல்பர்கா (கலாபுர்கி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

Tags:    

Similar News