இந்தியா

ஜூன் 4-க்கு பிறகு மோடி, பாஜகவுக்கு குட்பை - ராகுல்காந்தி

Published On 2024-05-28 18:23 IST   |   Update On 2024-05-28 18:23:00 IST
  • மோடி கூறியது போல, அவர் மற்றவர்களை போல உயிரியல் சார்ந்த பிறப்பல்ல.
  • பாஜகவின் ஆட்சி ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடையும்.

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 1 அன்று 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, வெப்ப அலையை தாங்க முடியாமல் அவர் தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்ட வீடியோ வைரலானது.

அக்கூட்டத்தில் பேசிய அவர், "ஜூன் 4க்குப் பிறகு குட்பை பாஜக , குட்பை நரேந்திர மோடி. பாஜகவின் ஆட்சி ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடையும். பாஜகவிற்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே உள்ளது.

மோடி கூறியது போல, அவர் மற்றவர்களை போல உயிரியல் சார்ந்த பிறப்பல்ல. கடவுளால் உருபெற்றவர் தான் என்றால், அவர் உருபெற்றது உழைக்கும் மக்களுக்காகவோ, உழவர்களுக்காகவோ அல்ல. அம்பானி - அதானிக்காக மட்டுமே.

தேர்தலுக்கு பின்பு ஊழல் தொடர்பாக மோடியிடம் அமலாக்கத்துறை விசாரித்தால் தனது செயல்களுக்கு பரமாத்மா தான் காரணம் என்று கூறி அவர் தப்பித்து விடுவார்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News