செய்திகள்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் மக்கள் என் பக்கம்: மோடி பெருமிதம்

Published On 2017-05-26 16:13 GMT   |   Update On 2017-05-26 16:13 GMT
கடுமையான பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மக்கள் முழு ஆதரவு அளித்ததாக பிரமர் மோடி கூறியதுடன், மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கவுகாத்தி:

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் அசாம் மாநிலம் கவுகாத்தியி்ல் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நாட்டு மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பலத்தை தருகிறது. பண மதிப்பிழப்பு நடிவடிக்கையானது மிகவும் கடுமையான நடவடிக்கை. இதனால், பல தலைவர்கள் மக்களிடையே கோபத்தையும் ஆத்திரத்தையும் தூண்ட முயற்சித்தனர். ஆனால், மக்களின் ஆசியுடன் இந்த அரசு அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்தது. கடுமையான முடிவுகளையும் கடந்து எங்களுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்தது. இப்போது மக்கள் மாற்றத்தை பார்க்க முடிகிறது. அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஆதரவு அளிக்கும் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைக்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக ஓ.பி.சி. கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பண விவகாரத்தைப் பொருத்தவரை, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். ஊழல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் கருப்புப் பணமானது, ஏழைகளுக்கு சென்று சேரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News