செய்திகள்

2019 தேர்தல் முன்னோட்டம்: 5 மாநிலங்களில் அமித்ஷா அதிரடி சுற்றுப் பயணம்

Published On 2017-04-28 19:35 GMT   |   Update On 2017-04-28 19:35 GMT
வருகின்ற 2019 பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி:

அமித்ஷா தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி டெல்லி உள்ளாட்சி தேர்தல், 5 மாநில சட்டசபை தேர்தல் என அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகின்றது.

இதனையடுத்து அடுத்ததாக அந்த கட்சியின் அடுத்த இலக்கு வருகின்ற 2019 பாராளுமன்ற தேர்தல் ஆகும். இந்த தேர்தலிலும் மோடியை முன்னிறுத்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வருகின்ற 2019 பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தில் முக்கிய நோக்கம் கடந்த பாராளுமன்றத்தில் பா.ஜ.க. தோல்வி அடைந்த 120 மக்களவை தொகுதிகளில் பா.ஜ.க.வின் வலிமையை கூட்டுவதாகும்.


தனது முதல் பயணமாக வருகின்ற சனிக்கிழமை இரண்டு நாள் ஜம்மு-காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு பாரதீய ஜனதா கட்சி ஆளும் கூட்டணியில் உள்ளது.

ஜம்மு-காஷ்மீரை தொடர்ந்து ஒடிசா, லட்சத் தீவு, தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அம்த்ஷா செல்ல உள்ளார். இந்த 4 மாநிலங்களிலும் தலா 15 நாட்கள் தங்குகிறார்.
Tags:    

Similar News