உள்ளூர் செய்திகள்
கஞ்சா

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 827 கிலோ கஞ்சா பறிமுதல்- 168 பேர் கைது

Published On 2021-12-29 10:26 GMT   |   Update On 2021-12-29 10:26 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையின் பயனாக 827 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 168 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு பொது அமைதியை காக்கும் வகையில் போலீசார் அந்தந்த காவல்நிலைய கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து சுற்றி தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு மாவட்ட காவல்துறையின் சார்பில் மேற் கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையின் பயனாக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப் பட்டதுடன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி கடந்த ஆண்டு 857 வழக்குகளில் 859 பேர் கைது செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான ஆயிரத்து 735 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய் யப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு இதுவரை ஆயிரத்து 74 வழக்குகளில் ஆயிரத்து 84 பேர் கைதுசெய்யப்பட்டு ரூ.12 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான 3 ஆயிரத்து 510 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதேபோல, கடந்த ஆண்டு கஞ்சா விற்பனை செய்ததாக 102 வழக்குகளில் 109 பேர் கைது செய்யப்பட்டு ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்து 500 மதிப்பிலான 319 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 95 வழக்கு களில் 168 பேர் கைது செய்யப்பட்டு ரூ.82 லட்சத்து 74 ஆயிரத்து 250 மதிப்பிலான 827 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த ஆண்டு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்ததாக 57 வழக்குகளில் 66 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க தனி அக்கறை செலுத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி கடந்த ஆண்டு மாவட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 466 வழக்குகளில் 556 பேர் கைது செய்யப்பட்டு 213 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த ஆண்டு இதுவரை 467 வழக்குகளில் 597 பேர் கைது செய்யப்பட்டு 321 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தெரிவித்தார்.
Tags:    

Similar News