செய்திகள்
பிரசாந்த் கிஷோர்

தி.மு.க.வின் அறிவிக்கப்படாத செயல்தலைவர் கிஷோர்- பா.ம.க. கிண்டல்

Published On 2020-02-03 10:18 GMT   |   Update On 2020-02-03 10:18 GMT
தி.மு.க.வின் அறிவிக்கப்படாத செயல் தலைவராக பிரசாந்த் கிஷோரை, ஸ்டாலின் நியமித்துள்ளாக பா.ம.க. செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் ‘ஐ-பேக்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தேர்தல் வியூகங்களை வகுப்பதில் கில்லாடி.

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆகியோர் பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக கொண்டுள்ளார்கள். தற்போது டெல்லியில் ஆம்- ஆத்மிக்காக வியூகம் வகுத்து செயல்படுத்தி வருகிறார்.

வருகிற 2021 தேர்தலுக்காக தி.மு.க.வும் அவரது உதவியை நாடி உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பல தமிழக இளைஞர்கள் ஐ-பேக் அமைப்பின் கீழ் 2021 தேர்தலில் இணைந்து பணியாற்ற இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவரது ஆலோசனையின் பேரிலேயே கட்சியிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தி.மு.க.வின் செயல்பாட்டை பா.ம.க. கிண்டல் செய்துள்ளது.

இது தொடர்பாக பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க.வின் அறிவிக்கப்படாத செயல் தலைவராக பிரசாந்த் கிஷோரை நியமித்துள்ளார் ஸ்டாலின். இனி ஒரு வடநாட்டு ஆரியர் தான் தி.மு.க.வை வழிநடத்த உள்ளார்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைகளே எங்கே போனது சுயமரியாதை? வீரமணி பதில் சொல்வாரா?

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News