என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "MK Stalin"
- மாநாட்டின் தலைவர் உரையைத் தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வாழ்த்துரை வழங்குகிறார்.
- மாலையில் பல தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது.
சென்னை:
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்றும், முன்னின்றும் நடத்தும், "தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு" மாநில உரிமை மீட்பு முழக்க மாநாடாக, வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டு வரலாற்றில் புது சரித்திரம் படைக்க உள்ள இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் இளைஞர் படை திரளுகிறது.
மாநாட்டுப் பந்தலுக்கு 'தந்தை பெரியார்' பெயரில் நுழைவாயில். திடலுக்குப் பெயரோ, அண்ணா திடல், கலைஞர் அரங்கம், பேராசிரியர் மேடை, வீரபாண்டியார் கொடி மேடை, முரசொலி மாறன் புகைப்பட கண்காட்சி.
வீரபாண்டி ஆ.ராஜா, வீரபாண்டி செழியன், சந்திரசேகர், 'நீட்' போராளிகள் அனிதா மற்றும் தனுஷ் ஆகியோர் பெயர்களால் தோரண வாயில்கள் என மாநாட்டின் ஒவ்வொரு ஏற்பாடும் உணர்ச்சியும், பொருளும் மிக்கதாய் அமைக்கப்படுகிறது.
காலை 9 மணியளவில் தி.மு.க. கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்குகிறது. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தி.மு.க. கொடியினை ஏற்றி வைக்கிறார். காலை 9.30 மணியளவில் மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் உரை, தி.மு.க. இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல்.
9.45 மணியளவில் மாநாட்டின் தலைவராக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை முன்மொழிதலும் வழி மொழிதலும் நடைபெறும். காலை 10 மணியளவில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் உரை ஆற்றுகிறார்.
இளைஞர் அணி கண்ட களங்கள்-திருச்சி சிவா, திராவிட மாடல்-எல்லோருக்கும் எல்லாம்-ஆ.ராசா, நிதித்துறையில் மாநில உரிமைகள் பறிப்பு-தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் கல்விப்புரட்சி-அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மொழிப்போர்-இந்தித் திணிப்பு-கம்பம் செல்வேந்திரன், திராவிட இயக்க முன்னோடிகள்-சபாபதி மோகன், கலைஞர் பாதையில் நம் தலைவர்-திண்டுக்கல் லியோனி, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி-சுப.வீரபாண்டியன், திராவிடம் சொல்லும் மனிதநேயம்-வக்கீல் அருள்மொழி, தலைவர் ஆட்சியில் தொழில்புரட்சி-டி.ஆர்.பி.ராஜா, கலைஞர்-ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிவிளக்கு-மதிவேந்தன், கலைஞரின் பேனா-கரு.பழனியப்பன், தி.மு.க. ஆட்சியில் திறன் மேம்பாடும் வேலைவாய்ப்பும்-எம்.எம்.அப்துல்லா, மருத்துவக் கட்டமைப்பு-இந்தியாவின் முன்னோடி தமிழ்நாடு-டாக்டர் எழிலன் நாகநாதன், இலக்கியமும் தி.மு.க.வும்-மனுஷ்யபுத்திரன், அவதூறுகளை அடித்து நொறுக்கிடும் கழகம்-வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, சமூக நீதி-வே.மதிமாறன், பத்திரிகையும் திராவிட இயக்கமும்-கோவி லெனின், 'நீட்' விலக்கு நம் இலக்கு-வக்கீல் ராஜீவ்காந்தி, பெரியாரும் பெண் விடுதலையும்-வக்கீல் செ.ம.மதிவதனி, தாயுமானவர் நம் தலைவர்-கனிமொழி, திருநகர் வாழ்வில் திராவிட அரசு-ரியா ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
மாலை 6.30 மணியளவில் மாநாட்டுத் தலைவர் உரை நடைபெறும். இந்தியா திரும்பிப் பார்க்கும் வண்ணம் இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்தி வாகை சூடும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை உரையாற்றுகிறார்.
மாநாட்டின் தலைவர் உரையைத் தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வாழ்த்துரை வழங்குகிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார். இரவு 7.30 மணியளவில் மாநாட்டின் முத்தாய்ப்பாக தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிறைவு பேரூரையாற்றுகிறார்.
அப்போது அவர் இளைஞர் அணி எதிர்காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகளுக்கு வியூகங்கள் வகுத்தளிப்பார்.
தி.மு.க. தலைவரின் உரையை அடுத்து சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் டாக்டர் வீரபாண்டி ஆ.பிரபு நன்றியுரையாற்றுகிறார். இந்த மாநாட்டு நிகழ்வுகளை, நிகழ்ச்சி நிரலை தி.செந்தில்வேல், திவ்யாநாதன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.
மாலையில் பல தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் மேற்கூறிய நிகழ்வுகள் மட்டுமின்றி மாநாட்டு மலர் வெளியீடு, 10 பாசறை நூல்கள் வெளியீடு, தி.மு.க. முன்னோடிகளுக்கு மரியாதை, 'நீட்' விலக்கு நம் இலக்கு' அஞ்சல் அட்டை ஒப்படைப்பு, புதுகை பூபாளம் கலைக்குழு, பாடகர் தெருக்குறள் அறிவு இசை நிகழ்ச்சி ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் மாநாட்டு பந்தலை ஆய்வு செய்தனர். அப்போது பந்தல் அமைக்கும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். அதில் இனி வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் மாநாட்டு திடலில் ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர் சாப்பிடக்கூடிய அளவில் உணவு அரங்கம், கழிப்பிட வசதி, சாலை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
- புயல் நேரத்தில் மழையோடு பலத்த காற்றும் வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
- மழைக்கு இறந்தவர்கள் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
புயல் சென்னை ஓரமாக ஆந்திரா செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. புயல் நேரத்தில் மழையோடு பலத்த காற்றும் வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மின்சார கம்பங்கள், வயர்கள் செல்லும் இடங்களில் கவனமாக செல்ல வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு வரலாம் என்று கருதுவதால் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை மழைக்கு இதுவரை 5 பேர் இறந்துள்ளார்கள். கால்நடைகள் 98 பலியாகி உள்ளது. 420 குடிசைகள் சேதம் அடைந்துள்ளது. மழைக்கு இறந்தவர்கள் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.
கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 121 நிவாரண முகாம்களும் 4 ஆயிரம் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 162 முகாம்கள் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரம் பேரை தங்கவைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. மழையோடு காற்றும் வீசும் என்று எதிர்பார்ப்பதால் மரக்கிளைகள் முறிந்து விழலாம். எனவே, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது அரசு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- மாற்றுத்திறனாளிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
நமது அரசு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிகளின் உடல் ரீதியான குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கவும், சிறப்புக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழங்கவும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பிற நலத்திட்டங்களுக்காகவும் வழங்கப்படும் நிதியினை இந்த அரசு உயர்த்திக்கொண்டே வருகிறது.
இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் முழு பங்கு வகிக்கும் வகையில் பொதுக்கட்டடங்களில் தடையற்ற சூழல் அமைத்தல், நவீன உதவி உபகரணங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, இந்த நாளில் "மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையான நீடித்த இலக்குகளை அடைந்திடவும், அவர்களின் நலனை பாதுகாக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என அனைவரும் ஒன்றிணைந்து உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வைஷாலி பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.
- உங்களின் பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கும்.
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். வைஷாலி பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.
இந்நிலையில், வைஷாலிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் 3-வது பெண் கிராண்ட் மாஸ்டரும், தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டருமான வைஷாலிக்கு எனது பாராட்டுகள். நீங்கள் தான் இப்போது முதல் கிராண்ட் மாஸ்டர் உடன்பிறப்புகள்.
உங்கள் சாதனைகளால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உங்களின் பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கும். இது தமிழ்நாட்டில் பெண்கள் அதிகாரம் பெற்றதற்கான சான்றாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
- மாநாட்டை வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பாக நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
- இனி வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.
ஆத்தூர்:
தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பாக நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாடு குறித்த மோட்டார் சைக்கிள் பேரணியை கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். அந்த பேரணி 234 தொகுதிகளுக்கும் சென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்தது. இந்த ஊர்வலத்தில் வந்தவர்களை அமைச்சர் கே.என்.நேரு பாராட்டியதுடன் தானும் மோட்டார் சைக்கிளை ஓட்டி உற்சாகபடுத்தினார்.
மாநாட்டு பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றும் வரும் நிலையில் பந்தலுக்காக பில்லர்கள் நடப்பட்டு விரைவில் தகர கூரைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. பிரமாண்ட முகப்பு தோற்றத்துடன் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பந்தல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தினமும் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் மாநாட்டு பந்தலை ஆய்வு செய்தனர். அப்போது பந்தல் அமைக்கும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். அதில் இனி வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் மாநாட்டு திடலில் ஒரே நேரத்தில் உணவு உண்ணக்கூடிய அளவில் உணவு அரங்கம், கழிப்பிட வசதி, சாலை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளையும் அமைச்சர்கள் பார்வை யிட்டனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட அவை தலைவர் கருணாநிதி, நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் முத்துலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் அன்பு என்கிற மருதமுத்து, சிவராமன், மூர்த்தி, பெத்ததநாயக்கன் பாளையம் நகர செயலாளர் வெங்கடேசன், பேரூராட்சி தலைவர் பழனியம்மாள், ஏத்தாப்பூர் பேரூர் செயலாளர் பாபு, பேரூராட்சி தலைவர் அன்பழகன், ராஜாமணி, வார்டு கவுன்சிலர்கள் கலைச்செல்வி, பெத்தநாயக்கன்பாளையம் தகவல் தொழில் நுட்ப பிரிவு ரகு, தனபால், ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- தமிழக முழுவதுமே கொலை களமாக மாறி வருகிறது.
- காவல்துறை சுதாரித்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு குற்றங்களை தடுக்க வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. மழை, வெள்ளம் வருவதும் அதனை பார்வையிட வேட்டியை மடித்துக்கொண்டு முன்பு கலைஞர், பின்பு ஸ்டாலின், அதன் பின்பு தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், இனி அவரது மகன் இதே போல பார்வையிட செல்வார். இதற்கு நிரந்தர தீர்வு காண அவர்களிடம் எந்த ஒரு தீர்வும் கிடையாது.
சென்னையில் மழை வெள்ளத்தோடு வீடுகளுக்குள் சாக்கடை நீர் செல்கிறது. மக்கள் மிகப்பெரிய அவதியை சந்தித்து வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். உலக அளவிலான நிபுணர்களை வரவழைத்து இதற்கு தீர்வு காண வேண்டும். முன்பு ஜெனிவாவில் இது போன்ற நிலை இருந்தது அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தவறு யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்ற நடவடிக்கை ராஜஸ்தானில் கடைசியாக நடைபெற்றுள்ளது. தற்போது இங்கு நடைபெற்றுள்ளது. இது முதலும் முடிவும் அல்ல, அந்தத் துறையில் ஒருவர் செய்த தவறுக்காக அனைவருமே தவறானவர்கள் என்று பார்ப்பது சரியல்ல.
இதுபோல காவல்துறையில் ஒருவர் தவறு செய்தால் காவல்துறை முழுமையாக தவறு என்று கூற முடியுமா? காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மற்றும் தமிழக அரசியல்வாதிகள் அரசியல் முதிர்ச்சி இன்றி பேசி வருகின்றனர்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வர உள்ளது. தெலுங்கானாவில் கடந்த முறை ஒரு இடத்தில் வென்ற நிலையில் இந்த முறை இரட்டை இலக்கங்களில் பா.ஜ.க. வெற்றி பெற உள்ளது. மிசோராமில் அந்த மாநில கட்சி வெற்றி பெரும் சூழல் உள்ளது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அங்கு துடைத்து எறியப்படும் நிலையில் உள்ளது.
சத்தீஸ்கரில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகுதான் முழுமையாக தெரியவரும்.

உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர மாட்டார் என்று கூறினார்கள். அரசியலுக்கு வரவழைக்கப்பட்டார். எம்.எல்.ஏ. ஆகமாட்டார் என்றார்கள். எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டார், அமைச்சராக மாட்டார் என்றார்கள். அமைச்சராக்கப்பட்டார். அதுபோல துணை முதல்வர் ஆக மாட்டார் என்று கூறினால் ஆவார் என்று அர்த்தம். அது அவர்கள் விருப்பம். இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி, நெல்லையில் படுகொலைகள் நடைபெற்றுள்ளது. தமிழக முழுவதுமே கொலை களமாக மாறி வருகிறது. காவல்துறை சுதாரித்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு குற்றங்களை தடுக்க வேண்டும்.
மாலத்தீவில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு அரசியல் சூழல் மாறி இருப்பதன் காரணமாக இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வங்கக் கடலில் அந்தமான் அருகில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் புயலாக மாறுகிறது.
- நிவாரண பணியில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2ம் தேதி முதல் 4-ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விட்டிருப்பதால் அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அரசு அதிகாரிகளின் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகள் தத்தமது பகுதிகளில் இருந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்திட உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
மக்களுக்கான உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிடும் வகையில் அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- முதலமைச்சர் தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.
- விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சென்னை:
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலக மாற்றுத்திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் இரண்டாம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.
தற்போது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை சென்னையில் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 2-ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. அடுத்து 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
- சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் கூட அதை மாநகராட்சி உடனடியாக அப்புறப்படுத்தி வருகிறது.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது. குறிப்பாக 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெறும். தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றும்.
நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் போன்ற நல்ல திட்டங்களை வழங்கி உள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெண்கள், தாய்மார்கள் முதலமைச்சர் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.
சென்னையில் தற்போது மிக அதிக அளவில் மழை பெய்துள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் கூட அதை மாநகராட்சி உடனடியாக அப்புறப்படுத்தி வருகிறது. நிவாரண பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. அடுத்து 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இன்றும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீது மக்கள் பற்று வைத்து ஆதரவு தந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை குஷ்பு சேரி சம்பந்தமாக பேசியது குறித்து உங்களது கருத்து என்ன என்று கேட்டதற்கு இளங்கோவன் கூறும்போது,
நான் அதைப்பற்றி ஒண்ணும் கூற விரும்பவில்லை. எனக்கு ஒன்றும் அதில் தப்பாக இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு அவருடைய பேச்சின் முழு விவரம் தெரியவில்லை என்று பதிலளித்தார்.
நடிகை குஷ்பு சமீபத்தில் சேரி குறித்து கூறிய கருத்து சர்ச்சையானது. காங்கிரஸ் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை குஷ்பு வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. கூறிய இந்த கருத்து இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.