செய்திகள்
அமைச்சர் ஜெயகுமார்

பெரியார் பற்றி விமர்சனம்: ரஜினிகாந்த் தவிர்த்து இருக்க வேண்டும்- அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

Published On 2020-01-20 08:35 GMT   |   Update On 2020-01-20 08:35 GMT
துக்ளக் விழாவில் பெரியார் பற்றிய விமர்சனத்தை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்து இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை:

மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம், மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.

மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் கொண்டு வர முடியாது. இதை தெரிந்து இருந்தும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியும் என்று கருதி மு.க.ஸ்டாலின் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக சொல்கிறார். ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மக்களை திசை திருப்ப ஸ்டாலின் முயற்சி செய்கிறார். மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது.


துக்ளக் விழாவில் பெரியார் பற்றிய விமர்சனத்தை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்து இருக்க வேண்டும். அவருடைய 16 வயதினிலே படத்தின் வசனம் போன்று பரட்டை பற்ற வைத்துள்ளார். அது பற்றி எரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News