செய்திகள்
அதிமுக ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் பழனிசாமி வலியுறுத்தல்

Published On 2019-11-06 14:09 GMT   |   Update On 2019-11-06 14:09 GMT
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
  • தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
  • இதுதொடர்பாக ஆலோசிக்க அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • இதில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னை:

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதலமைச்சரான பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக துணை முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம், ஆகியோர் தலைமையில் கட்சி தலைமையகத்தில் இன்று  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொனடனர். இதில், தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும் என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News