செய்திகள்

திமுக செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது- கருணாநிதி மறைவுக்கு இரங்கல்

Published On 2018-08-14 04:40 GMT   |   Update On 2018-08-14 05:39 GMT
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. #DMK #Karunanidhi #MKStalin #DMKExecutiveCommittee
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து கட்சியின் நிர்வாகக்குழுவில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக கருணாநிதி உடல்நலம் குன்றியதில் இருந்து கட்சியின் செயல் தலைவராக பணியாற்றி வரும் மு.க.ஸ்டாலின், தலைவராக பொறுப்பேற்கலாம் என கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கருணாநிதி மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்சியின் நிர்வாகக் குழுவில் செய்யப்படும் மாற்றங்கள், பொதுக்குழு கூடும் தேதி ஆகியவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால், தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காகவே இக்கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார்.



அதன்படி திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கருணாநிதி மறைவுக்கு முதலில் இரங்கல்  தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் தலைவர்கள் உரையாற்றினர்.

இந்த கூட்டத்தின் நிறைவில், கட்சி தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்கள் உள்ளனர். #DMK #DMKExecutiveCommittee 
Tags:    

Similar News