search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக செயற்குழு கூட்டம்"

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு ஸ்பிக் நகரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடக்கிறது. #anitharadhakrishnanmla
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு ஸ்பிக்நகரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.அருணாசலம் தலைமை தாங்குகிறார். 

    கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.  கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #anitharadhakrishnanmla
    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நாளை காலை நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெறுகிறது. #DMK
    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் காந்தி செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் உடையப்பன் தலைமையில் நடைபெறுகிறது. சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏவும், தேர்தல் பணிக்குழு செயலாளருமான எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டபேரவை உறுப்பினர்கள், நகர, ஒன்றிய பேரூர் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK
    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் இரா.உடையவர் தலைமையில் நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் இரா.உடையவர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் அனைவரையும் வரவேற்று கூட்டப்பொருள் பற்றி விளக்கமாக பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் பொன்னுசாமி முன்னாள் எம்.எல்.ஏ விமலாசிவக்குமார், பொருளாளர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பவுத்திரம் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாயவன், வனிதா செங்கோட்டையன், மாநில நிர்வாகிகள் ராணி, நக்கீரன், நகரெ பாறுப்பாளர் மணிமாறன், நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், ஒன்றியசெயலாளர்கள் ராமசுவாமிமுன்னாள் எம்.எல்.ஏ ஜெகநாதன், வி.கே.பழனிவேல், பி.பாலு (எ) பாலசுப்ரமணியகவுதம், துரை (எ) ராமசாமி, பி.முத்துசாமி, பாலசுந்தரம், அசோக்குமார், பேரூர் கழக செயலாளர்கள் முருகவேல், கண்ணன், அன்பழகன், என்.செல்வராசு, தனபால், எம்.சுந்தராஜ், செல்லவேல் (எ) செல்லப்பன், டி.பி.எஸ்.கார்த்திகேயன், ஜெயக்குமார், நடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தரமற்ற நிலக்கரியைஅதிக விலை கொடுத்து வாங்குவதில் கமி‌ஷன் வாங்குவதால் தரமற்ற நிலக்கரியால் நம் நாட்டிற்கு தேவையான மின் உற்பத்தி செய்யமுடியாத நிலை உள்ளது.

    தரமற்ற நிலக்கரியை கொள்முதல் செய்வதால் நம்நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை. அளிக்கப்படுகிறது. இந்த நிலையை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருச்சியில் 14-ந் தேதி திமுக செயற்குழு கூட்டம் நடக்கிறது. என்று மாவட்ட செயலாளர் கேஎன் நேரு எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #knnehrumla
    திருச்சி:

    திருச்சியில் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது. இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக  வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:-

    திருச்சி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 14-ந் தேதி காலை 9 மணிக்கு  திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட,மாநகர நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப் பாளர்கள், துணை அமைப் பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் உள்ளிட்ட அனை வரும் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். 

    விழுப்புரத்தில் வருகிற 15-ந் தேதி நடக்கும் முப்பெரும் விழா, 18-ந் தேதி ஊழல் அ.தி.மு.க. அரசை கண்டித்து நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. #knnehrumla
    பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.  கட்சி அலுவலகத்தில் ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் சுத்தரத்தினம் தலைமை  தாங்கினார். துணை செயலாளர்கள் ஆதித்யன், பூமதி, பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் பேசு கையில், அ.தி.மு.க.  ஆட்சியில் எந்தவித திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. முதல்வர் முதல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரை அனைவரும் மக்களை பற்றி சிந்திக்காமல் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். வெகு விரைவில் மக்கள் அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி யெறிய உள்ளனர். தி.மு.க. ஆட்சியின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும். 

    எனவே தி.மு.க.வினர் கடுமையாக உழைத்து வரும் தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க அனைவரும் பாடுபடவேண்டும் என்றார்.

    இதில் பூத் கமிட்டி அமைத்தல், கட்சி பணி, செயல்பாடுகள் போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிப்பது, தி.மு.க. தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கூட்டத்தில் பொறுப்பாளர்கள் ஆனந்தராஜன், ராமச்சந்திரன், சிவக்குமார், வக்கீல் கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் கலையரசன், லாடபுரம் செம்புலி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.
    சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் வக்கீல் வெற்றி விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி முருகன் வரவேற்றார். 

    இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வது, கருணாநிதி உயிரிழந்த செய்தி கேட்டு மரணமடைந்த தி.மு.க. தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வது, தி.மு.க.வை வழி நடத்த செயல் தலைவர் ஸ்டாலின் தலைவராக வேண்டும். 

    வருகிற 26-ந்தேதி நெல்லையில் நடக்கும் தலைவர் நினைவேந்தல் கூட்டத்திற்கு மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சார்பில் 25 வாகனங்களில் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் காசிப்பாண்டியன், செந்தூர்பாண்டியன், ராமசந்திரன், விவேகானந்தன், சரவணன், அய்யப்பன், சுகுமார் மற்றும் ஊராட்சி கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    புதுவை மாநில தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவை வழிநடத்த ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #mkstalin

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. செயற்குழு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள மாநில கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் சீத்தா. வேதநாயகம் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் ஜானகிராமன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு, மாநில கழக துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் சண்.குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் புதுவை தெற்கு மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக செயற்குழு கூட்டத்தில் தலைவர் கலைஞர் மறைவிற்கு எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

    புதுவை மாநிலத்தில் 4 முறை தி.மு.க. ஆட்சியை அமைத்து அழகு பார்த்தவர் தலைவர் கலைஞர். இன்றைக்கு புதுவை மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கிற காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு அமைய அவர் எடுத்த முயற்சியும், இவ்வரசு நிறைவேற்றுவதற்காக அவர் அளித்த ஆலோசனைகளும், தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்து அண்ணா திடலில் அவர் ஆற்றிய உரையும் என்றும் நெஞ்சில் இருந்து அகலாதவைகள். தென் மாநிலங்களுக்கு பயணம் செல்லும்போதெல்லாம் புதுவைக்கு வந்து மகிழ்ச்சியோடு அவர் ஓய்வெடுத்துச் சென்றதெல்லாம் இந்த மண்ணுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறோம்.

    இதற்கெல்லாம் மேலாக தமிழகத்தோடு, புதுவையை இணைக்க வேண்டும் என்று அப்போதைய மத்திய, தமிழக அரசுகள் முயற்சித்தபோது வெகுண்டெழுந்த தலைவர் கலைஞர் இந்த இணைப்பு முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மக்கள் கொதித்தெழுந்து “இணைப்பு எதிர்ப்பு போராட்டம்” நடத்தியபோது, புதுவை மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தை அப்போராட்டத்திற்கு தலைமையேற்கச் செய்தவர். அதுமட்டுமல்லாமல் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை புதுவை மக்களுக்கு துணை நின்றவர் தலைவர் கலைஞர். அப்படிப்பட்ட தலைவருக்கு புகழஞ்சலி செலுத்துவதும், அவர் வழியில் கழகத்தின் பணிகளை முன்னெடுப்பதும், புதுவை மாநில தி.மு.க. கடமையாக கருதுகிறது.

    தலைவர் கலைஞரின் பேரிழப்பிற்கு பிறகு கழகத்தைக் கட்டிக்காக்க, கழகத்தை வழிநடத்த, ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்களின் ஏகோபித்த எண்ணம் நிறைவேற, கழகச் செயல் தலைவர் தளபதியார் தி.மு.க. தலைவராக பொறுப்பேற்க மாநிலக்கழகம் ஏகமனதாக முன்மொழிகிறது.

    இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், வேலன், அருட்செல்வி, பாஸ்கர், டாக்டர் மாயக் கிருஷ்ணன், தொகுதி கழக செயலாளர்கள் நட ராஜன், சக்திவேல், திராவிடமணி, சீத்தாராமன், லோகு, ரவிச்சந்திரன், பாண்டு அரிகிருஷ்ணன், வெங்கடாஜலபதி, சாரங்கன் (பொறுப்பு), ராமசாமி, கலியகார்த்திகேயன், இளை ஞர் அணி அமைப்பாளர் முகமது யூனூஸ், மாணவர் அணி அமைப்பாளர் மணி மாறன், விவசாய அணி அமைப்பாளர் சோமசுந்தரம், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் ராமகிருஷ்ணன், தொண்டர் அணி அமைப்பாளர் சுரேஷ், மருத்துவர் அணி அமைப்பாளர் முத்துக்குமரன், பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்குமார், மீனவர் அணி அமைப்பாளர் தனசேகர், நெசவாளர் அணி அமைப்பாளர் மதி, சிறுபான்மை அணி அமைப்பாளர் அகஸ்டீன் சித்து, இலக்கிய அணி அமைப்பாளர் பி.டி. பன்னீர் செல்வம், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மகளிர் அணி அமைப்பாளர் சுசீலா, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் தேன்மொழி மற்றும் அனைத்து அணிகளின் துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    முடிவில் உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார். #mkstalin

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. #DMK #Karunanidhi #MKStalin #DMKExecutiveCommittee
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து கட்சியின் நிர்வாகக்குழுவில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக கருணாநிதி உடல்நலம் குன்றியதில் இருந்து கட்சியின் செயல் தலைவராக பணியாற்றி வரும் மு.க.ஸ்டாலின், தலைவராக பொறுப்பேற்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கருணாநிதி மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கட்சியின் நிர்வாகக் குழுவில் செய்யப்படும் மாற்றங்கள், பொதுக்குழு கூடும் தேதி ஆகியவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால், தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காகவே இக்கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார்.



    அதன்படி திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கருணாநிதி மறைவுக்கு முதலில் இரங்கல்  தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் தலைவர்கள் உரையாற்றினர்.

    இந்த கூட்டத்தின் நிறைவில், கட்சி தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்கள் உள்ளனர். #DMK #DMKExecutiveCommittee 
    ×