2026-இல் சாதனை வெற்றிக்குத் தயாராவோம், வெல்வோம் 200 படைப்போம் வரலாறு - மு.க.ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமை செயற் குழு கூட்டம் நடைபெற்றது. எதிரிகள் எந்த வடிவில் வந்தாலும், அவர்களை அடையாளம் கண்டு வீழ்த்தும் ஆற்றல் கொண்டது தி.மு.க.
2026-இல் சாதனை வெற்றிக்குத் தயாராவோம், வெல்வோம் 200 படைப்போம் வரலாறு - மு.க.ஸ்டாலின்
Published on

தி.மு.க. தலைமை செயற் குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

பரபரப்பான அரசியல் சூழலில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட துணைப் பொதுச் செயலாளர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்திற்கு எதிர்ப்பு, அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஏழாவது முறை ஆட்சி அமைக்கணும் என்பது தான் நம்முடைய இலக்கு. 200 தொகுதிகளில் நம்முடைய கூட்டணி வெல்லும். 2026-ல் வெற்றி நமது தான் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தி.மு.க. தலைமை செயற் குழு கூட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "கழகம் வெள்ளிவிழா - பொன்விழா - பவளவிழா கண்டபோதெல்லாம் ஆட்சியில் இருக்கும் நாம் நூற்றாண்டிலும் ஆட்சியில் இருப்போம்; களத்தில் அதற்கான உழைப்பைக் கொடுப்போம்!

75 ஆண்டுகளாக எதிரிகள் எந்த வடிவில் வந்தாலும், அவர்களை அடையாளம் கண்டு வீழ்த்தும் ஆற்றல் கொண்டது தி.மு.க!

செயற்குழுவில் பெற்ற கருத்துகள், வகுத்த வியூகங்களுடன் 2026-இல் நம் கொள்கைக் கூட்டணியின் சாதனை வெற்றிக்குத் தயாராவோம்! வெல்வோம் 200! படைப்போம் வரலாறு!" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com