செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் - தேர்ச்சி விகிதத்தில் மெட்ரிக் பள்ளிகள் முதலிடம்

Published On 2018-05-23 04:36 GMT   |   Update On 2018-05-23 04:36 GMT
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. #SSLCResult #TNResult
சென்னை:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று இணையதளங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம். இந்த ஆண்டு 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை மெட்ரிக் பள்ளி முதலிடத்தில் உள்ளது. மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.79 ஆகும். பெண்கள் பள்ளிகள் 96.27 சதவீத தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 94.81 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.36 சதவீதம், அரசுப் பள்ளிகள் 91.36 சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 87.54 சதவீதம் என்ற அளவில் தேர்ச்சி விகிதம் உள்ளது.



பாடவாரியாக பார்க்கையில் அறிவியல் படத்தில் அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 98.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியலில் 96.75 சதவீதம், ஆங்கிலத்தில் 96.50 சதவீதம், மொழிப்பாடத்தில் 96.42 சதவீதம், கணிதத்தில் 96.18 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதேபோல் மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம், மொத்த மதிப்பெண் அடிப்படையிலான பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை http://dge.tn.nic.in/SSLC_2018_ ANALYSIS.pdf என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். #SSLCResult #TNResult
Tags:    

Similar News