செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டில் வைகோ வழக்கு

Published On 2018-04-26 01:34 GMT   |   Update On 2018-04-26 02:48 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், ஆலையை விரிவாக்கம் செய்வதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் வைகோ கூறியுள்ளார்.#BanSterlite #TalkAboutSterlite #Vaiko
மதுரை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிறது. இந்த ஆலைக்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய லைசென்சு கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதியுடன் முடிந்துவிட்டது. இந்த ஆலையால் அப்பகுதியில் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சுற்றுச்சூழலும் மாசடைந்துள்ளது. எனவே இந்த ஆலையால் அப்பகுதி மக்கள் பல்வேறு தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு மத்திய-மாநில அரசுகளிடம் முறையாக அனுமதி பெறப்படவில்லை.



எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், ஆலையை விரிவாக்கம் செய்வதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #Vaigo
Tags:    

Similar News