என் மலர்

  நீங்கள் தேடியது "case"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மீனா நாங்குநேரி பழைய பஸ் நிலையத்திற்கு டீ வாங்க சென்றார்.
  • ஆத்திரம் அடைந்த மணி, மீனாவை அவதூறாக பேசி தாக்கினார்.

  களக்காடு:

  நாங்குநேரி செல்வன் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி மீனா (வயது 46). இவர்களது மகன் கோகுல கண்ணன் என்ற பெட்ரோல் மணி. கூலி தொழிலாளியான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு இவர் செலவுக்கு பணம் கேட்டு தாயாரிடம் தகராறு செய்தார். இதுகுறித்து புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

  அதன் பின் அவர் ஜாமீனில் விடுதலையானார். சிறையில் இருந்து விடுதலையான பிறகும் அவர் வேலைக்கு செல்லாமல் தாயாரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று மீனா நாங்குநேரி பழைய பஸ் நிலையத்திற்கு டீ வாங்க சென்றார். அப்போது அங்கு வந்த மணி, மீனாவிடம் வழக்கம் போல் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். மீனா பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த மணி அவரை அவதூறாக பேசி தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார்.

  இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மணியை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சி தில்லை நகரில் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு
  • போலீசார் வழக்கு பதிவு விசாரணை

  திருச்சி

  திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் துவரங்குறிச்சியை சேர்ந்த அல்லாபக்ஸ் என்பவர் தனது காரை நிறுத்தி இருந்தார். அந்த காரை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த சாம்சங் டேப்பை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அல்லாபக்ஸ் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடும்ப பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
  • சம்பத்தன்று ஞானமூர்த்தியும் அவரது மனைவி தமிழ்ச்செல்வியும் கல்பனாவை பிடித்து தாக்கியுள்ளனர்.

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 32). இவரது மனைவி கல்பனா (27). அதே பகுதியை சேர்ந்த வடிவேலின் அண்ணன் ஞானமூர்த்தி ( 35). இவரது மனைவி தமிழ்ச்செல்வி ( 32).

  இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. சம்பத்தன்று ஞானமூர்த்தியும் அவரது மனைவி தமிழ்ச்செல்வியும் கல்பனாவை பிடித்து தாக்கியுள்ளனர். அப்போது கல்பனா மயக்கம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராசப்பன் விசாரணை நடத்தி ஞானமூர்த்தி மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 54 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை வழக்குபதிவு செய்துள்ளது.
  • மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

  சிவகங்கை

  சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

  தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று கடைகள் மற்றும் நிறு வனங்கள், உணவு நிறுவ னங்கள்,மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இந்த தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டு மானால் அவர்களுக்கு வேலைய ளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு அளிக்க வேண்டும்.

  மேற்கண்ட தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IV EE என்ற படிவத்திலும், மோட்டார். போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

  அவ்வாறு தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விடுமுறை ஆய்வின் போது மேற்கண்ட சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய வகையில் சிவகங்கை மாவட்டத்தில் 54 நிறுவனங்களில் முரண்பா டுகள் கண்டறியப்பட்டன.

  இதையடுத்து அந்த சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

  மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுபானங்களை பதுக்கி விற்ற 6 பேர் மீது வழக்கு பதியபட்டது
  • அவர்களிடம் இருந்து 36 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

  கரூர்:

  கரூர் மாவட்டத்தில் 90 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. பகல் 12 மணி முதல் 10 மணி வரை கடைகள் செயல்படுகின்றன. இந்த நேரம் தவிர்த்து மற்ற நேரத்தில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது குறித்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில், வாங்கல், சின்னதாராபுரம் போன்ற பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக 6 பேர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 36 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • போலீஸ் நிலையத்தில் எவ்வித வழக்குகளும் நிலுவையில் இருக்க கூடாது.

  சுவாமிமலை:

  சுவாமிமலை போலீஸ் நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் வருகை தந்தார். அவரை சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ. செந்தில்குமார் வரவேற்றார். தொடர்ந்து, அவர் போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சூழலை பார்வையிட்டு தூய்மையாக வைத்து கொள்ள அறிவுறுத்தி னார். அதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பராம ரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  போலீஸ் நிலையத்தில் எவ்வித வழக்குகளும் நிலுவையில் இருக்க கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தி, போலீஸ் நிலையத்தை சுற்றியுள்ள வாகனங்களை ஒழுங்குப்ப டுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிநாதசாமி கோவில் இருப்பதால் எந்த நேரத்திலும் போலீசார் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நம்பிராஜன் தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த நவீனுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
  • ஜெகன் (40) என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்துக்குள் புகுந்து தண்ணீர் பாய்க்க பயன்படுத்தப்படும் குழாய்கள் உள்பட சுமார் ரூ.10 லட்சம் பொருட்களை சேதப்படுத்தினர்.

  களக்காடு:

  களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வை சேர்ந்தவர் நம்பிராஜன். இவரது மகன் முகில்(வயது 20). இவர் தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த நவீனுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

  சமாதானம்

  கடம்போடுவாழ்வு ரோட்டில் சென்ற போது, மற்றொரு தரப்பை சேர்ந்த ராஜா உள்பட சிலர் சேர்ந்து தகராறு செய்துள்ளனர். தொடர்ந்து முகிலின் மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் தங்களுக்குள் பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

  ஆனால் இந்த சமரசத்தை ஏற்றுக்கொள்ளாத கடம்போடுவாழ்வை சேர்ந்த ராஜா உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் இரவில் முகில் தரப்பினர் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து முத்து(75) என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள மோட்டார் அறைக்கு தீ வைத்தனர்.

  வழக்குப்பதிவு

  தொடர்ந்து அந்த கும்பல், ஜெகன் (40) என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்துக்குள் புகுந்து தண்ணீர் பாய்க்க பயன்படுத்தப்படும் குழாய்கள் உள்பட சுமார் ரூ.10 லட்சம் பொருட்களை சேதப்படுத்தினர்.

  இதுபற்றி தகவல் அறிந்து களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கடம்போடு வாழ்வை சேர்ந்த சின்னத்துரை மகன்கள் ராஜா, முத்து மற்றும் மாரியப்பன் மகன்கள் வெள்ளையன், கொம்பையா உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாரைக்கிணறு ஊராட்சியை சேர்ந்த ராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
  • ஆயில்பட்டி போலீசார் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்ததாக பிரகாஷ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ராசிபுரம்:

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு ஊராட்சியை சேர்ந்த ராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

  ஜல்லிக்கட்டுக்கு பல பகுதிகளைச் சேர்ந்த காளை பிடி வீரர்களும், காளைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதுபற்றி தகவல் அறிந்த ராசிபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கிருஷ்ணன், ஆயில்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்தினர்.

  இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அழைத்து வரப்பட்டிருந்த காளை மாடு ஒன்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அதிகாரிகளும் போலீசாரும் அதனை மறுத்தனர். இந்நிலையில், ஆயில்பட்டி போலீசார் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்ததாக பிரகாஷ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டிற்கு சென்று அவருக்கு கொலை மிரட்டல்
  • 4 பேர் மீது வழக்குப்பதிவு

  கரூர்

  லாலாபேட்டை அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 70). கூலி தொழிலாளியான இவர், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக உயர் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த ரங்கன் என்கிற வடமலை, அமிர்தம், பழனிச்சாமி, ஆனந்த் ஆகிய 4 பேரும் சேர்ந்து பழனியாண்டியின் வீட்டிற்கு சென்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், லாலபேட்டை போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  பெரம்பலூர்

  அண்ணங்கார குப்பம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் முஜ்மல்(வயது 63). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் முஜ்மல் ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இடையக்குறிச்சி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த சிட்டு என்ற இளையராஜா(36) என்பவர் முஜ்மலிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முஜ்மல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிட்டு என்ற இளையராஜா மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 61 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது
  • உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் கூறினார்

  ஜெயங்கொண்டம்:

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப் பட்டா வழங்க, ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

  இதில் 61வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் ( நி. எ) கூறினார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்தப் பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்.

  இந்த மக்கள் நீதிமன்றத்தினை மாவட்ட அமர்வு நீதிபதியும் சட்டப்பணி குழு தலைவருமான மகாலட்சுமி துவங்கி வைத்தார். இதில் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா, ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) வேலுமணி, அரசு வழக்கறிஞர்கள் மோகன் ராஜ், செந்தில்குமார், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குழந்தைகள் நல அலுவலர் பூர்ணம் புகார்
  • சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  கரூர்:

  கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜா (வயது 22). இவர், நாகம்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 6-ந் தேதி, சாலப்பாளையம் பட்டாளம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து, அரவக்குறிச்சி குழந்தைகள் நல அலுவலர் பூர்ணம் கொடுத்த புகாரின்பேரில், கரூர் புறநகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை விசாரித்து வருகின்றனர்.