செய்திகள்

குற்றங்களை தடுப்பதில் காவல்துறை தீவிரமாக செயல்படுகிறது - எடப்பாடி பழனிசாமி

Published On 2018-04-04 12:30 GMT   |   Update On 2018-04-04 13:16 GMT
தமிழகத்தில் குற்ற நிகழ்வுகளை தடுப்பதில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாக பயிற்சி டி.எஸ்.பி.க்கள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சென்னை:

தமிழக காவல்துறையில் டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு நிகழ்ச்சி, மற்றும் ஜனாதிபதி, உள்துறை அமைச்சகம், முதல்வர் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயிற்சி டி.எஸ்.பி.க்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து, காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கி கவுரவித்த முதல்வர் பேசியதாவது:-

தமிழகத்தில் குற்ற நிகழ்வுகளை தடுப்பதில் காவல்துறை தீவிரமாக செயல்படுகிறது. கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி, தேவையான வசதிகள் செய்யப்பட்டு கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினரின் மன உளைச்சலை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

40 வயது நிறைவடைந்த காவலர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் இலவச முழு உடல் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணியின்போது காவல்துறையினருக்கு எந்த குறுக்கீடும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு முதல்வர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர், காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். #TamilNews
Tags:    

Similar News