செய்திகள்

அரசியலில் கூட்டாக செயல்பாடு: ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் பேட்டி

Published On 2018-01-17 16:13 GMT   |   Update On 2018-01-17 18:58 GMT
கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம் முடிவு செய்யும் என ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அந்த கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #Rajinikanth
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். தனது ரசிகர் மன்றம் மூலமாக கட்சி பணிகள் குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த கமலுஹாசனுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறிய ரஜினிகாந்த், கமலுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு, ‘காலம் தான் பதில் சொல்லும் என்று கூறினார். மேலும், எப்போது தேர்தல் வந்தாலும் சந்திப்பேன் என்றும் ரஜினி கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஜினியின் கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசனும் தெரிவித்துள்ளார். “ஆன்மீக அரசியல் என்பது ரஜினியின் நம்பிக்கை. எனது அரசியல் வேறு. மக்கள் தங்களின் பலத்தை உணரச் செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை. மக்கள் பிரச்சனையை மக்களிடமே எடுத்துச் செல்வதற்கே சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்” என்று அவர் பேட்டியளித்துள்ளார்.
Tags:    

Similar News