தமிழ்நாடு

வைகோவுக்கு அறுவை சிகிச்சை - துரை வைகோ தகவல்

Published On 2024-05-26 09:01 GMT   |   Update On 2024-05-26 09:01 GMT
  • திருமண நிகழ்வில் கலந்து கொள்ள திருநெல்வேலி சென்றிருந்தார்.
  • விமானம் மூலம் வைகோ சிகிச்சைக்காக சென்னைக்கு திரும்பியுள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இயக்க தலைவர் வைகோ நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக வைகோவின் மகனும், ம.தி.மு.க. கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் அவர்களின் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்கள் நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள்."

"எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்."

"சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல் நலம் பெறுவார்கள்; வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News