தமிழ்நாடு செய்திகள்

விபத்துகள் நிகழாமல் ரெயில்வே போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Published On 2024-06-17 12:21 IST   |   Update On 2024-06-17 12:51:00 IST
  • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • விபத்தில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்,

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜப்பைகுரி பகுதியில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரெயிலும் சரக்கு ரெயிலும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ரெயில் பாதையில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ள நிலையில், இதுகுறித்த விசாரணை நடத்தி, இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ரெயில்வே போக்குவரத்தை சரிவர கண்காணிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News