தமிழ்நாடு செய்திகள்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு: ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை..!
- இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
- நயினார் நாகேந்திரன் உடன் மத்திய அமைச்சர் எல். முருகனும் உடன் சென்றிருந்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக பாஜக- அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பா.ம.க. உள்பட பல கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திற்கு சென்று தமிழக காங்கிரஸ் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அமைச்சர் எல். முருகனும் உடன் சென்றிருந்தார்.
இந்த சந்திப்பு குறித்த கேள்விக்கு "எடப்பாடி பழனிசாமியுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு" என வேறேதும் கூறாமல் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அடுத்த மாதம் தொடக்கத்தில் பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகம் வருகிறார். அதற்கு முன்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவு செய்ய பாஜக விரும்புவதாக தெரிகிறது. இதனால் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.