என் மலர்
நீங்கள் தேடியது "Durai vaiko"
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வணிகர்கள் பொருட்களுக்கு தரும் தள்ளுபடி போல பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை ஏற்றிவிட்டு தற்போது குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
அடிப்படை கலால் வரியில் மட்டும் தான் வருவாய் மாநில அரசுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மற்ற கலால் வரி வருவாய் மத்திய அரசுக்கு தான் செல்கிறது. 50 சதவீதம் இருந்த அடிப்படை கலால் வரியை ஒன்றிய அரசு 4 சதவீதமாக குறைத்துள்ளது
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை புள்ளிவிவரங்களுடன் மக்களை குழப்புவதற்காக அவதூறு அண்ணாமலையாக கிளம்பியுள்ளார்.
தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் நீட் தேர்வு, தொழிற் கல்விக்கு நுழைவுத்தேர்வினை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்தை வஞ்சிக்கும் அம்சங்கள் உள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கினை ஒன்றிய அரசு மாற்ற வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி தமிழக பா.ஜ.க. தலைமையகமான கமலாலயம் முன்பு காந்தி வழியில் போராட்டம் நடத்துவோம்.
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரவுள்ள நிலையில் ஈழ நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று ஒன்றிய அரசின் கீழ் உள்ள சில அமைப்புகள் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு இடையூறாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக நினைவேந்தல் நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கலந்து கொள்ளவில்லை.
தமிழ் ஈழம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்பதில் மாற்றம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ கோஷம் டிரெண்டிங் ஆகும். ம.தி.மு.க. ஆவேசமாக இந்த குரலை கையில் எடுக்கும். ஆனால் இந்த முறை அமைதியாக இருந்தது பற்றி ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-
கடந்த கால சூழ்நிலை வேறு. அப்போது நீட் எதிர்ப்பு தலைதூக்கி நின்றது. தமிழகத்துக்கு எதிராக பல பிரச்சினைகளும் தலைதூக்கி நின்றன.
ஆனால் இந்த முறை தமிழக மக்கள் நலனுக்காக 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க வந்தார். முழுக்க முழுக்க தமிழக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடங்கி வைக்க வந்தார். இந்த சூழ்நிலையில் ‘கோ பேக் மோடி’ என்பது நியாயமல்ல. முறையல்ல.
அமித் ஷா, தமிழக மக்களிடம் மோடி மீது அன்பும், ஆதரவும் பெருகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதே தேர்தல் வரும் போதுதான் பார்க்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, கொலைகள் அதிகரித்து விட்டது என்பது சரியல்ல. கடந்த ஆட்சியிலும் கொலைகள் நடந்தது. ஆனால் இப்போது குற்றவாளிகளை உடனே பிடிக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கிறார்கள்.
பேரறிவாளன் விடுதலை என்பது காலம் கடத்தி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு. அவரது விடுதலையை காங்கிரஸ் எதிர்ப்பது அந்த கட்சியின் தனிப்பட்ட கொள்கை.
மோடி நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்ததாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். அவர் அரசியல் செய்யவில்லை. அண்ணாமலைதான் அவதூறு பரப்புகிறார். அவரது பெயரையே நான் அவதூறு அண்ணாமலை என்றுதான் கூறுவேன்.
இவ்வாறு அவர்கூறினார்.
- ஆவணத் திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் வைகோவிற்கு தெரியாது.
- தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக இருந்தது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குறித்த மாமனிதன் ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இத்திரைப்படத்தை ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆவணத்திரைப்படத்தை பார்த்தனர்.
பின்னர் துரை வைகோ பேசியதாவது:
இந்த ஆவணத் திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் வைகோவிற்கு தெரியாது. தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக இருந்தது. பழையபடி இழந்ததை மீட்க வேண்டும். வரலாறு படைக்க வேண்டும் என்று இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் பல திட்டங்கள் வைத்துள்ளேன்.
இயக்கத்தை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும். இழந்ததை மீட்போம், வரலாறு படைப்போம், அதற்கு ஒரு செயல் திட்டம் வைத்துள்ளேன். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த ஆவணப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தொண்டர்கள், நிர்வாகிகள் இணையதளங்கள் மற்றும் வீடு வீடாக எடுத்துச் சென்றுள்ளனர்.
இதை சாதாரண தொண்டர்கள் செய்யும் பொழுது ஏன் மூத்த நிர்வாகிகள் செய்ய தயங்குகின்றனர்.
இயக்கத்திற்கு உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும். மற்றவர்கள் கதவு திறந்தே உள்ளது வெளியே செல்லலாம். உழைப்பிற்கும், விசுவாசத்திற்கு மட்டும் தான் மரியாதை. வைகோ மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

ம.தி.மு.க. சட்ட திட்ட விதி எண்: 26-ன்படி, தலைமைக்கழகத்தின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும், கழகத்தின் எல்லா அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் தலைமை நிலையம் இயங்கி வருகின்றது.
கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இயங்கும் தலைமை நிலையப் பணிகளை, தலைமைக் கழக செயலாளர் ஒருங்கிணைப்பார்.
கழகப் பொதுச்செயலாளரின் சுற்றுப்பயணங்கள், சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கடமையையும் தலைமைக் கழகச் செயலாளர் மேற்கொள்வார்.
கழகத்தின் நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்; அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட மற்ற பல்வேறு அமைப்புகளுடன் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் தொடர்புகளில் பொதுச்செயலாளர் இடும் பணிகளை நிறைவேற்றுதல் தலைமைக் கழகச் செயலாளரின் பணி ஆகும்.
ம.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் (ம.தி.மு.க. ஐ.டி. விங்) பொறுப்பாளர் பொறுப்பையும், கூடுதலாக தலைமைக் கழகச் செயலாளரே கவனிப்பார்.






