இந்தியா

சட்டம்-ஒழுங்கும், சமாஜ்வாடி கட்சியும் ஒன்றுக்கொன்று எதிரானது: பிரதமர் மோடி தாக்கு

Published On 2024-05-26 09:18 GMT   |   Update On 2024-05-26 09:18 GMT
  • பாராளுமன்ற தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
  • ஐந்தாண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என இந்தியா கூட்டணி கூறுகிறது.

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பாராளுமன்ற தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பொதுமக்கள் உறுதி செய்துள்ளனர். நல்ல நோக்கங்கள், கொள்கைகள் காரணமாக 3-வது முறையாக பா.ஜ.க-தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

ஐந்தாண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என இந்தியா கூட்டணி கூறுகிறது. அத்தகைய பிரதமர்களால் நாட்டை வலுப்படுத்த முடியுமா? தனது பதவியை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கும் ஒரு பிரதமரால் நாட்டை நடத்த முடியுமா?

எனவே வலிமையான நாட்டை உருவாக்க வலிமையான பிரதமரை கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதனால்தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மகத்தான ஆதரவு கிடைத்து வருகிறது.

இந்தியா கூட்டணி கட்சிகளை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் வகுப்புவாத குணம் கொண்டவர்கள். மிகவும் சாதிவெறி உள்ளவர்கள் என்பதை அறிவார்கள். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்பை மாற்ற இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேச மக்கள் அரசியலை புரிந்து கொண்டுள்ளனர். எந்த அறிவாளியும் ஏற்கனவே வீழ்ச்சி அடைந்து வரும் கட்சியில் முதலீடு செய்யமாட்டார்.

சட்டம்-ஒழுங்கும், சமாஜ்வாடி கட்சியும் ஒன்றுக்கொன்று எதிரானது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி அரசு வாக்கு வங்கியின் ஒரு பகுதியாக மாபியாக்களை எதிர்நோக்கியிருந்தது.

ஆனால் யோகி ஆதித்யநாத் அரசின் கீழ் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமாஜ்வாடி கட்சிக்காக தங்கள் வாக்குகளை யாரும் வீணாக்க விரும்பவில்லை.

சமாஜ்வாடி, காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக அர்ப்பணித்துள்ளன. நான் ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்து உழைக்கிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News