செய்திகள்

கல்லூரி மாணவியின் வீடியோவை ‘பேஸ்புக்கில்’ பரப்பிய போலீஸ் ஏட்டு மகன் கைது

Published On 2017-12-13 11:35 GMT   |   Update On 2017-12-13 11:36 GMT
கோவையில் காதலை துண்டித்ததால் கல்லூரி மாணவியின் வீடியோவை பேஸ்புக்கில் பரப்பிய போலீஸ் ஏட்டு மகனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கோவை:

கோவை உக்கடம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சிவக்குமார்.

இவரது மகன் மனோஜ் குமார்(வயது 23). 10-ம் வகுப்பு படித்த இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இவர்கள் ராமநாதபுரத்தில் வசித்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை காதலித்தார். அப்போது மாணவியுடன் நெருங்கி பழகிய மனோஜ் குமார் புகைப்படங்கள், வீடியோ எடுத்து வைத்துக் கொண்டார்.

இந்நிலையில் மனோஜ்குமாருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது மாணவிக்கு தெரிய வந்தது. அவர் மனோஜ்குமாருடனான தொடர்பை துண்டித்தார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே மாணவியை மிரட்டினார். எனினும் மாணவி அவருடன் பேச மறுத்தார்.

இதனால் மனோஜ்குமார், மாணவியின் வீடியோவை ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பினார். இதையறிந்த மாணவி அதிர்ச்சியடைந்தார்

இதுகுறித்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மனோஜ்குமாரை கைது செய்தனர்.

பின்னர் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News