செய்திகள்

கொடைக்கானலில் மழையினால் காய்கறிகள் விலை கடும் உயர்வு

Published On 2017-11-05 12:03 GMT   |   Update On 2017-11-05 12:03 GMT
கொடைக்கானலில் மழையால் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் காய்கறிகள் வாங்கி செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் மலைப்பயிர்களான கேரட், முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கு, காலிபிளவர், பீன்ஸ் போன்ற காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இவை பல நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆனால் கத்தரிக்காய், வெண்டைக்காய், கீரை, தக்காளி, வெங்காயம், போன்ற அத்தியாவசிய காய் கறிகள் தரை பகுதிகளான வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

வாரம் தோறும் கொடைக்கானல் 7 ரோடு சந்திப்பு பகுதியில் சந்தை நடைபெறும். இந்த சந்தையில் அனைத்து காய்கறிகளும் வியாபாரிகளால் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்படும். ஆனால் மழை காரணமாக இன்று குறைந்த அளவு காய்கறிகளே வந்தன. இதனால் அனைத்து காய்களும் கடந்த வாரத்தை விட 2 மடங்கு விலை அதிகமாக விற்பனை ஆனது. இதனால் சாமானிய மக்கள் காய்கறிகள் வாங்கி செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.
Tags:    

Similar News