செய்திகள்

புளூவேல் விளையாட்டை தடை செய்ய வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-09-12 08:52 GMT   |   Update On 2017-09-12 08:52 GMT
புளூவேல் விளையாட்டை முற்றிலும் மத்திய அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

ரஷியாவில் அறிமுகமாகி உலகம் முழுவதும் பரவி நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உயிரை காவு வாங்கியுள்ளது ஆன்லைன் வீடியோ கேம் “புளுவேல்”.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் (வயது19) என்பவர் இந்த விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து மதுரை ஐகோர்ட்டு தானாக முன்வந்து (சூ-மோட்டோ) வழக்கு பதிவு செய்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் “புளூவேல்” விளையாட்டை ஷேர் இட், பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொள்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்.


இந்த விளையாட்டை முற்றிலும் தடை செய்ய மத்திய-மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்னிலையில் வந்தது. அப்போது “புளூவேல்” விளையாட்டை முற்றிலும் மத்திய அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் இந்த விளையாட்டால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் இது சம்பந்தமாக அனுபவம் வாய்ந்த காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி முருகனிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இந்த விளையாட்டின் விபரீதம் குறித்து பள்ளி, உயர் கல்வித்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News