செய்திகள்

பிறந்த நாள் விழா: ஏழைகள்-விவசாயிகளுக்கு விஜயகாந்த் உதவி

Published On 2017-08-24 10:24 GMT   |   Update On 2017-08-24 10:24 GMT
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 65-வது பிறந்த நாளை (வெள்ளி) கொண்டாடுகிறார்.

விஜயகாந்த் தனது பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். பிறந்த நாளை யொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

விவசாயிகள் 100 பேருக்கு தலா ரூ.18 ஆயிரம் மதிப்பீட்டில் ஆயுள் காப்பீட்டு திட்ட பாலிசியை விஜயகாந்த் வழங்கினார். ராமாவரம் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.


கால் ஊனமுற்ற வாலிபர் ஒருவருக்கு 3 சக்கர ஸ்கூட்டர், மின்சாரம் தாக்கி பலியான திருவாலங்காட்டை சேர்ந்த தொண்டர் ஜெயகாந்த் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி, தர்மபுரி மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான டிராக்டரை மாவட்ட செயலாளரிடம் விஜயகாந்த் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த், மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் மற்றும் மாவட்ட செயலாளர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News