search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலத்திட்ட உதவிகள்"

    • பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறையின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இந்த விழாவுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

    பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.

    • மாணவ-மாணவிகளை ஊக்கப் படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
    • போங் விசேட் பைத்தூன், ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து பேசினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே சிவலார்குளத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர் ஆந்திராவில் சி.பி.எப். நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர் தான் படித்த பள்ளிக்கு உதவிடும் வகையில் தான் பணிபுரிந்து வரும் நிறுவனத்தின் சார்பில் நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக உதவி செய்துள்ளார்.

    நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியில் சி.பி.எப். இந்தியா நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கல்வியில் சிறந்த மாணவ-மாணவிகளை ஊக்கப் படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஆல்வின் பாலன் தலைமை தாங்கினார். நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சி.பி.எப். நிறுவனத்தின் சேர்மன் போங் விசேட் பைத்தூன், ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்களை வழங்கி பேசினார்.

    இந்த விழாவில் சி.பி.எப். நிறுவனத்தின் துணை சேர்மன் குவான் சைபிரேம், சி.பி.எப். நிறுவனத்தின் தலைவர் சிரபோங்க் பொங்சா, துணை தலைவர் சைரட் அன்சரி பைக்கான், சீனியர் துணை தலைவர் சித்திசாய் சீஹோ, ஆந்திரா விற்பனை பிரிவு துணை தலைவர் வெங்கடாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் வசந்தி ஜான்சி ராணி வரவேற்றார். பள்ளியில் ரிப்பன் வெட்டி ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். பள்ளி மாணவ -மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்
    • மேற்படிப்பு படிக்கும் மாணவிகள், புதுமைப் பெண் திட்டத்தில் இணைந்து பயன்பற வேண்டும்.

    திருவட்டார் :

    குலசேகரம் அரசு மூடு மனுவேல் திருமண மண்ட பத்தில் நபார்டு வங்கி மூலம் பழங்குடியினர் மேம்பாடு திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நபார்டு பொது மேலாளர் சங்கர் நாராயணன் முன்னி லை வகித்தார்.

    குமரி மாவட்ட நபார்டு உதவி பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம் வர வேற்றார். சிறப்பு விருந்தின ராக அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி னார். பழங்குடி மக்கள் வைத்திருந்த கண் காட்சி யையும் அவர் பார்வை யிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது :-

    குமரி மாவட்டத்தை சார்ந்த பட்டியலின மக்கள் பிற சமூக மக்களுடன் சேர்ந்து எவ்வித வேறுபாடு மின்றி சுமூகமாக வாழக் கூடிய சூழல் நமது மாவட்டத்தில் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் மனித நேயம். இந்த உணர்வில் நம்மை சுற்றி யுள்ள ஏழை-எளிய மக்க ளும் வாழ்வில் முன்னேற்றம் அடையும் வகையில் நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்.

    மாவட்டத்தில் குழந்தை கள் அனைவரையும் நன்கு கல்வி கற்க வைக்க வேண் டும். நமது மாவட்டத்தில் உள்ள மீன்பிடி தொழில் செய்யும் மக்களும் கல்வியில் சிறந்து விளங்கிறார்கள்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்விக்காக பல்வேறு நலத்திட்ட உதவி களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதனை பயன்படுத்தி குழந்தைகள் அனைவரும் நன்கு கல்வி கற்க வேண்டும். மேற்படிப்பு படிக்கும் மாணவிகள், புதுமைப் பெண் திட்டத்தில் இணைந்து பயன்பற வேண் டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவ லர் கனகராஜ், திருவட்டார் தாசில்தார் முருகன், மாவட்ட அரசு வக்கீல் ஜான்சன், குலசேகரம் பேரூ ராட்சி துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், குலசேகரம் தி.மு.க. பேரூர் செயலாளர் ஜெபித்ஜாஸ் மற்றும் பலர் கலந்து கொண் டனர்.

    • நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருணா வழங்கினாா்.
    • ஒருங்கிணைந்த தோட்டக்கலைத்துறை சாா்பில் ரூ.9.55 லட்சம் மதிப்பில் வேளாண் எந்திரங்கள் அளிக்கப்பட்டன.

    ஊட்டி,

    கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது.

    அப்போது 159 பயனாளிகளுக்கு ரூ. 97.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதன்ஒருபகுதியாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சார்பில் 9 பேருக்கு ரூ.44.58 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் 2 பேருக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள், குழந்தைகள் பாதுகாப்பு துறை சாா்பில் 2 பேருக்கு ரூ.8 ஆயிரம், பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 4 பேருக்கு ரூ.1 லட்சம் வைப்புத்தொகை பத்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

    மேலும் ஆதிதிராவிடர்-பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 9 பேருக்கு ஓட்டுநா் உரிமம், பிற்பட்டோா்-சிறுபான்மை நலத்துறை சாா்பில் 5 பேருக்கு ரூ. 26,340 மதிப்பில் தையல் எந்திரங்கள், ஒருங்கிணைந்த தோட்டக்கலைத்துறை சாா்பில் ரூ.9.55 லட்சம் மதிப்பில் வேளாண் எந்திரங்கள் அளிக்கப்பட்டன.

    மனுநீதிநாள் முகாமில் தோட்டக்கலை இணை இயக்குநா் ஷிபிலாமேரி, மாவட்ட போலீஸ் டி.எஸ்.பி செந்தில்குமாா், சுகாதாரபணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராஹிம்ஷா, கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் கீா்த்தனா, தேவா்சோலை பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ்பாபு, ஸ்ரீமதுரை ஊராட்சித்தலைவா் சுனில், மாவட்ட சமூகநல அலுவலா் பிரவீனா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அதிகாரி தேவகுமாரி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஷோபனா, கூடலூா் தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்க வேண்டும்.
    • அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது:-

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    அவரது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சங்கரன்கோவிலில் உள்ள சிறப்பு குழந்தைகள் பள்ளியில் முழு நேர உணவு வழங்குதல், வாசுதேவநல்லூரில் உள்ள சிறப்பு இல்லத்தில் முழு நேர உணவு வழங்குதல், வடக்கு மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரங்கள் மற்றும் குழந்தைகள் காப்பு பெட்டகம் வழங்குதல்,

    வடக்கு மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்க ளுக்கு சீருடை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்.

    மேலும் பிறந்தநாள் அன்று ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இளைஞர் அணி சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிற பாராளுமன்ற தேர்தலில் இளைஞரணியின் பங்கு குறித்து தொடர் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணியினர் அந்தந்த பகுதிகளில் இந்த நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
    • ராம்மோகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

     அவிநாசி:

    ]அவினாசி துலுக்கமுத்தூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.

    சமூகநலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், கிராமங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து தீர்வு காண தனிக்கவனம் செலுத்த வேண்டும். கடைக்கோடி கிராமம் வரை அரசின் திட்டங்கள் சென்றுசேர அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், இணையவழி இ-பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தாட்கோ சார்பில் கடனுதவி, விலையில்லா சலவைப்பெட்டிகள், தையல் எந்திரங்கள் என மொத்தம் 160 பயனாளிகளுக்கு ரூ.87 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை கலெக்டர் வழங்கினார். பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

    முகாமில் திருப்பூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ராம்குமார், வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வரலட்சுமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் திருக்குமரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் செல்வி, தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித்குமார், சமூக நல அதிகாரி ரஞ்சிதாதேவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி குமாரராஜா, அவினாசி தாசில்தார் ராம்மோகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • செங்கமங்கலம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது
    • 26 பேருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் செங்கமங்கலம் கிராமத்தில் தெய்வாங்கப் பெருமாள் திருக்கோயில் திடலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

    தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இம்முகாமில் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி எம்.பி பழனிமாணிக்கம் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் பேராவூரணி வட்டம் செங்கமங்கலம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்று வருகிறது.

    சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு ரூபாய் 34 ஆயிரத்து 200 மதிப்பீட்டில் உதவி தொகையும் வேளாண்மை துறை சார்பில் 4 பயனாளிகளுக்கும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செங்கமங்கலம் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 15 லட்சம், தோட்டக்கலை துறை மூலம் மானியம் பெறும் மூன்று பயனாளிகளுக்கு ரூபாய் 33 ஆயிரத்து 625 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வருவாய் துறை சார்பில் 26 பேருக்கு பட்டா மாறுதல் ( உட்பிரிவு) இம்முகாமில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    முன்னதாக தோட்டக்கலை துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

    வருவாய் கோட்டாட்சியர் அ.அக்பர் அலி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், தவமணி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் உ.துரை மாணிக்கம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜரத்தினம், செங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.செல்வம், காலகம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராவூரணி வட்டாட்சியர் ரா.தெய்வானை நன்றி கூறினார்.

    • அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகர திமுக சார்பில் முத்து விநாயகர் கோவில் தெருவில் கருணாநிதி நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் ஜீவரேகா விஜயராஜ், குட்டி புகழேந்தி, நகரமன்ற உறுப்பினர் ராணி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்ட பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    விழாவில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம் நேரு, ஏ.ஏ. ஆறுமுகம், இரா.கார்த்திகேயன், சர்தார், நகர மன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணதாசன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கிரிக்கெட் ரவி, சமயராஜ், ராயல் தியாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வக்கீல் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக் கொண்டார்.
    • நிகழ்ச்சியில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 374 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக் கொண்டார்.

    தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் நலவாரிய நலதிட்ட உதவிகள், உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.94 ஆயிரத்து 500 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5,479 வீதம் மொத்தம் ரூ.32ஆயிரத்து 874 மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரங்களையும், தாட்கோ மூலம் 14 பயனாளிகளுக்கு தூய்மை பணியாளர்கள் நல வாரிய அட்டைகளையும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 374 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்ப ந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு வார விழா சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.
    • கூட்டுறவுத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றிருந்தபோது விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்வோம் என்று ரூ.7,500 கோடியை முழுமையாக ரத்து செய்தார்.

    சேலம்:

    70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் பார்த்திபன் எம்.பி., சேலம் வடக்கு ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் 1996-ம் ஆண்டு கூட்டுறவுத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றிருந்தபோது விவசாயிகள் வாங்கிய கடனை

    முழுமையாக ரத்து செய்வோம் என்று ரூ.7,500 கோடியை முழுமையாக ரத்து செய்தார். 1996 முதல் 2001 காலகட்டத்தில் விவசாயிகளுக்கு கடன்களை வழங்கியதோடு 600-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் வங்கிகளுக்கும், 12,500 நியாய விலைக் கடைகளுக்கும், 3 மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அதேபோல் தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ.20,000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.

    கலைஞர் ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய கடன் தொகைகளை நபார்டு வங்கிகளில் இருந்து 9 சதவீதத்திற்குக் கடனாகப் பெற்று, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் உள்ள 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 1,500 வங்கிகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரசிடமிருந்து நிதியினைப் பெற்று செயல்பட்டு வருகிறது. மேலும் 126 நகர வங்கிகளும், 70 நில வள வங்கிகள், 23 மத்திய வங்கிகளும், ஒரு மாநில வங்கியும் செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகச் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற உள்ளூரில் உள்ள செயலாளர் மூலம் உறுதி செய்தவுடன் கடன் வழங்கப்படுவதால் விவசாயிகள் எளிதாக கடன் பெற முடிகிறது. விவசாயிகள், சிறுவியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும் துறையாக கூட்டுறவுத் துறை விளங்குகிறது.

    இக்கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியின் வாயிலாக பயிர்கடன், கால்நடை பராமரிப்புக்கடன், மத்தியக் காலக் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், வீட்டு வசதி கடன், மகளிர் சிறுவணிகக்கடன் மற்றும் வீடு அடமானக்கடன் என 3,024 பயனாளிகளுக்கு ரூ.33.99 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட வழங்கப்படுகின்றன.

    மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகளும், மாவட்ட அளவில் சிறப்பாக செயலாற்றிய 39 கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாகப் பணியாற்றி விருதுகளைப் பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சேலம் மேற்கு அருள் எம்.எல்.ஏ., மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், சேகோ சர்வ் மேலாண்மை இயக்குநர் லலித் ஆதித்ய நீலம், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குநர் மீராபாய், சரக துணைப் பதிவாளர் முத்து விஜயா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவி த்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இந்த குறைதீர்வு கூட்டத்தில், பட்டா தொடர்பாக 124 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 55 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 46 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 34 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 82 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 47 மனுக்களும், தையல் இயந்திரம் கோரி 33 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 35 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 144 ஆக மொத்தம் 623 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடை உபகரணத்தை 14 நபர்களுக்கு ரூ.75,000 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 1 பயனாளிக்கு தையல் எந்திரத்தையும் வழங்கினார்.இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் ரமா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் நடந்த 70-வது கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவிகள், சிறு வணிகக்கடன் திட்டம் போன்ற திட்டங்கள் வழங்கப்படுவதாக விழாவில் அமைச்சர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சிக்குட் பட்ட தனியார் மகாலில், கூட்டுறவுத்துறையின் சார்பில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். அதில் கூட்டுறவுத்துறையின் வாயிலாக பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று உரிய பயன்களை வழங்குவ தற்கென நடவடிக்கையும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகள் மட்டு மன்றி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு தொழில்கள் துவங்கி பயன்பெறும் வகையில், கடனுதவிகள், சிறு வணிகக்கடன் திட்டம் போன்ற திட்டங்கள் வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்ற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அனைத்து கூட்டுறவு நிறுவ னங்களின் மூலம் 71,456 உறுப்பினர்களுக்கு ரூ.374.18 கோடி மதிப்பீட்டில் பயிர்கட னுதவியும், 7,853 உறுப்பி னர்களுக்கு ரூ.48.35 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவியும், 2,47, 920 உறுப்பினர்களுக்கு ரூ.1,519.03 கோடி மதிப்பீட் டில் நகைக்கடனுதவியும், 2,384 குழுக்களுக்கு ரூ.134.98 கோடி மதிப்பீட்டில் சுய உதவிக்குழு கடனுதவியும், 1,368 உறுப்பினர்களுக்கு ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் சிறுவணிக கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 4,18,657 நபர் களுக்கு ரூ.3,537.12 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் தற்சமயம் வரை கூட்டுறவுத் துறையின் சார்பில் மாவட் டம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.

    2 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை யும், 1 பயனாளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காப் பீட்டு தொகைக்கான காசோ லையினையும் என மொத் தம் 3,171 பயனாளிகளுக்கு ரூ.34,88,51,260 மதிப்பீட்டி லான நலத்திட்ட உதவிகள் இவ்விழாவின் வாயிலாக வழங்கப்படவுள்ளது என் றார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ. ஜூனு, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் கே.சி.ரவிச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பால சந்தர், சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த், துணைத்தலைவர் கார்கண்ணன், துணை பதி வாளர்கள் பாலசந்தர், நாக ராஜன், குழந்தைவேல், ஸ்ரீமான், பாரதி, சேதுராமன், குமரன், காஞ்சிரங்கால்

    ஊராட்சி மன்றத்தலைவர் கே.எஸ்.எம்.மணிமுத்து மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் (பொ) மாரிச்சாமி, நுகர்பொ ருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், கூட்டுறவு சார்பதிவாளர், செயலாட்சியர்கள் பொன் னையா, சரவணன், சிவ கங்கை கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் (பொ) பொ.சக்திவேல் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களை சார்ந்த தலைவர்கள் மற்றும் உறுப் பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×