கூட்டுறவு வாரவிழா: நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

ராமநாதபுரத்தில் கூட்டுறவு வாரவிழா நடந்தது. இதில் 1531 பயனாளிகளுக்கு ரூ. 11.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்
கூட்டறவு வார விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். அருகில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உள்பட பலர் உள்ளனர்.
கூட்டறவு வார விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். அருகில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உள்பட பலர் உள்ளனர்.
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கினார். தொடர்ந்து 1531 பயனாளிகளுக்கு ரூ. 11.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கி பேசியதாவது:-

விவசாயிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன் தான் இந்த அரசின் நோக்கம் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் பல்வேறு திட்ட ங்களை செய்து வருகிறார்.

மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்ட த்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் முன்கூட்டியே கொண்டு வரப்பட்டுள்ளன. வைகை தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, கல்வி, மின்சாரம், சாலை வசதி, குடிநீர்வசதி இவை அனைத்தையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் ராம.கருமாணிக்கம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திசைவீரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முத்துக்குமார், மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மனோகரன், துணை பதிவாளர்கள் ஜெய்சங்கர், முருகன், புஷ்பலதா, சுப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com