என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்   அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
    X

    நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • நலத்திட்ட உதவிகளை வழங்கி கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ. பேசினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வின் 51- வது தொடக்க விழாவையொட்டி கட்சிக்கொடி ஏற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்விற்கு அ.தி.மு.க.வின் நகரச் செயலாளர் கேசவன் தலைமை வகித்தார்.

    கிருஷ்ணகிரி அ.தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலாளர் கே. அசோக்குமார் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம் எம்.எல்.ஏ., காவேரிபட்டிணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவி, பேரூராட்சி முன்னாள் தலைவர் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ. பேசினார். அ.தி.மு.க. வட்டச் செயலாளர் ஹரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    Next Story
    ×