search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண்மை துறை சார்பில் ரூ.4.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - ஜோதி நிர்மலா சாமி வழங்கினார்
    X

    வேளாண்மை துறை சார்பில் ரூ.4.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - ஜோதி நிர்மலா சாமி வழங்கினார்

    • அகஸ்தீஸ்வரம் வட்டத்தை சேர்ந்த ஒரு பயனாளிக்கு ரூ.2.12 லட்சம் மதிப் பில் ரூ.85 ஆயிரம் மானியத்தில் விசை உழுவை எந்திரம்
    • (Plastic Crates), ரூ.20 ஆயிரம் மதிப்பிலான அலுமினிய ஏணி (Ladder) ஆகியவை 50 சதவீத மானியம் என மொத்தம் ரூ.4.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள்

    நாகர்கோவில்,:

    தோவாளை சகாய நகர் பகுதியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதி வுத்துறை அரசு செயலாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஜோதி நிர்மலாசாமி, கலெக்டர் அரவிந்த் தலைமையில் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் தோட்டக்க லைத்துறையின் சார்பில் விவசாய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஜோதி நிர்மலாசாமி பேசிய தாவது:-

    சகாயநகர் பகுதியில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் கலை ஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம் வட்டத்தை சேர்ந்த ஒரு பயனாளிக்கு ரூ.2.12 லட்சம் மதிப் பில் ரூ.85 ஆயிரம் மானி யத்தில் விசை உழுவை எந்திரத்தினையும், தோவாளை வட்டத்தை சேர்ந்த ஒரு பயனாளிக்கு ரூ.2.21 லட்சம் மதிப்பில் விசை உழுவை எந்திரத்தினையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.1,500 மதிப்பிலான கைத்தெளிப்பான் 50 சதவீதம் மானியத்திலும், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான விசைத்தெளிப்பான் சதவீதம் மானியத்தில் ஒரு 50 வழங்கப்பட்டதோடு, 3 பயனாளிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங் கப்பட்டது.

    மேலும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் சார்பில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.500 மதிப்பிலான மலர் அறுவடைக்கான முகப்பு விளக்கு (Head Light). ரூ.7,500 மதிப்பிலான நெகிழி கூடைகள்

    (Plastic Crates), ரூ.20 ஆயிரம் மதிப்பிலான அலுமினிய ஏணி (Ladder) ஆகியவை 50 சதவீத மானியம் என மொத்தம் ரூ.4.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை பயனாளி களுக்கு வழங்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, தோவாளை ஊராட்சி ஒன்றி யம், செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் பழுத டைந்த வீடுகளை சரி செய் யும் பணியினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டதோடு பணி களை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட் டிற்கு கொண்டு வர துறைசார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட் டது.

    இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக விசுவாசபுரம் பகுதியில் அமைந்துள்ள நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவல கத்தினை ஜோதி நிர்மலாசாமி ஆய்வு மேற் கொண்டார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப் பிரியா, உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், வேளாண்மை இணை இயக்குநர் ஹனி ஜாய் சுஜாதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (விவசா யம்) வாணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) ஜோஸ், விவசாய பெருமக்கள் உட்பட துறைசார்ந்த அலுவ லர்கள் பலர் கலந்து கொண் டார்கள்.

    Next Story
    ×