செய்திகள்

மாட்டிறைச்சி தடை விவகாரம்: முதல்வர் பழனிசாமி கருத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

Published On 2017-06-21 10:30 GMT   |   Update On 2017-06-21 10:30 GMT
மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதிலுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கு எதிரான தடை அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் மாட்டிறைச்சி மீதான தடைக்கு எதிராக தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு வந்த பின்பே தமிழக அரசு முடிவுகளை எடுக்கும் என தெரிவித்துள்ளார். இது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் கூட்டணியில் உள்ள தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய மூன்று தோழமை கட்சி எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News