செய்திகள்

ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை: சீமான் பேட்டி

Published On 2017-05-23 09:18 GMT   |   Update On 2017-05-23 09:18 GMT
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தேவையில்லை. அவர் நினைப்பதை நாங்கள் செய்வோம் என திருச்சியில் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சி:

பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தேவையில்லை. தமிழ்நாட்டில் 40 வருடங்கள் இருந்ததால் தமிழகத்தை ஆளலாம் என நினைக்ககூடாது. நான் மகாராஷ்டிராவில் 20 வருடங்கள் இருந்தால் மகாராஷ்டிராவை ஆள முடியுமா? வெள்ளைக்காரர்கள் 100 வருடங்கள் இருந்தார்கள் என்பதற்காக அவர்கள் ஆள நினைக்கலாமா?

எங்களுக்கு தான் தமிழ்நாட்டில் தூசி இருக்கிறது. ஒட்டடை அடிக்க வேண்டும். எங்கு ஆனி அடிக்க வேண்டும் என்பது தெரியும். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அவர் அரசியலுக்கு வந்து செய்ய நினைப்பதை நாங்கள் செய்வோம்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றால் கர்நாடகாவில் காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் இருப்பது ஜனநாயகமா? சினிமாவில் நடிக்க வந்தோமா? சம்பாதித்தோமா? என்று இருக்க வேண்டும்.

அ.தி.மு.க. 2 அணியாக பிரிந்திருப்பது அணியல்ல. அது பிணி.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News